உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்த 2 எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்

போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்த 2 எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ.,வில் இணைந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டத்தில் நடைபயணத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து 2 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இந்நிலையில் எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 04, 2024 00:37

காவலர்களை வீட்டு வேலைகளுக்கு உபயோகப்படுத்தும், படுத்திக்கொண்டிருக்கும் அமைச்சர்களையும், MLA -களையும் பதவி நீக்கம் செய்யவேண்டும். செய்வீர்களா? தைரியம் இருக்கா?


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:53

இருவருக்கும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சீட் உறுதி... அந்த கட்சிக்கு இரு தொகுதிகளுக்கு ஆள் தேட அவசியம் இல்லை. ஆனால் ஜெயிக்க வைப்பது மக்கள் கையில் தான் உள்ளது.


MARUTHU PANDIAR
ஜன 03, 2024 21:24

லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடி பட்ட போலீசு, பெண் விவகாரத்தில் அப்பட்டமாக சிக்கிய போலீசு, கட்டப்பஞ்சாயத்து நிருபிக்கப்பட்ட போலீசு, சக பெண் போலீசிடம் ஓப்பன் ஆக அத்து மீறிய போலீசு, பணியிலிருக்கும் நேரத்திலேயே குடித்து விட்டு போதையில் கீழ்த்தரமாக நடந்துக்கிட்ட போலீசு, இப்படி எத்தனையோ ஆதாரத்துடன் பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் செய்தி வருதே அப்புறம் என்ன நடக்குது? முழு சம்பளத்துடன் காத்திருப்பு பட்டியல், அல்லது வேறு ஸ்டேஷனுக்கு மாற்றல் இப்படி தானே நடக்குதுனு மக்கள் கேக்கறாங்க .


J.Isaac
ஜன 03, 2024 18:32

நிரந்தரமாக நீக்க வேண்டும்


Siva
ஜன 03, 2024 21:50

போலீஸ் உடையில் லஞ்சம் வாங்கலாமா அய்யா .. அது தப்பு இல்லையே


duruvasar
ஜன 03, 2024 18:30

போலீஸ் உடையில் அதிகாரி வீட்டுக்கு காய்கறி வாங்கி கொண்டு வந்தால் குற்றம் இல்லையா ?


jayvee
ஜன 03, 2024 17:48

அனால் திராவிட குப்பைகளுக்காக சீருடை அணிந்துகொண்டு அடிமை வேலை செய்யும் போலீசுக்கு பதவி உயர்வு நிச்சயம்.. ஏன் TNPSC தலைவர்பதவி கூட கிடைக்கும் ..


N SASIKUMAR YADHAV
ஜன 03, 2024 17:37

ஒரு சிலர் தீயமுக தொண்டரைபோல செயல்படுகிறார்களே அவர்களை என்ன செய்ய போகிறது தீயமுக தலைமையிலான விடியாத திமுக அரசு


Anand
ஜன 03, 2024 15:49

ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் நேர்மையாக இருந்த ஒரே காரணத்துக்காக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்து அவமதித்த காவல் அதிகாரிகள் மீது அன்பு காட்டுவோம்.... இது பெரியார் மண், மாடல் ஆட்சி...


NicoleThomson
ஜன 03, 2024 15:29

எப்படி சேரவேண்டும் என்று கேட்டதற்காக சஸ்பெண்ட் என்பதெல்லாம் too மச்


Palanisamy Sekar
ஜன 03, 2024 15:28

ஸ்டாலின் திமுகவில் சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரமோஷன் கொடுத்திருப்பார்கள். இதென்ன கொடுமை. அண்ணாமலையை பார்த்த சந்தோஷத்தில் கர்நாடக சிங்கத்தோடு இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டது தப்பாய்யா? இதுக்காக வீட்டுக்கு ஓடிப்போய் உடைமாற்றிவிட்டு வரமுடியுமா என்ன? நீங்கள் என்னதான் தடுத்தாலும் இந்த போலீஸ் அதிகாரிகள் போலவே பலரும் அண்ணாமலையை மனதார ஆதரிக்க தயாராகிவிட்டார்கள். இதுக்கு மேலே உங்களால் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்கிறேன்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை