உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார், மண்டப கண்ணாடிகளை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை

கார், மண்டப கண்ணாடிகளை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை

ராமநாதபுரம் : பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தின் கண்ணாடி, கார் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரை மாவட்டம் கீரைத்துரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிமுத்து 51. இவர் 2017 நவ.15ல் பரமக்குடி தனியார் திருமண மண்டபத்தில் படுப்பதற்காக இடம் கேட்டார். அங்கிருந்த மேலாளர் முத்துச்சாமி இடம்தர மறுத்துவிட்டார். அதன்பிறகு நவ., 19ல் வந்த காளிமுத்து இரும்பு கம்பியால் மண்டபத்தில் இருந்த காரின் கண்ணாடி மற்றும் கல் எறிந்து மண்டப கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார். பரமக்குடி போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குமரகுரு, குற்றவாளியான காளிமுத்துக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை