உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "சி.ஏ.ஏ., சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு; முதல்ல படிங்க": எல்.முருகன் பேட்டி

"சி.ஏ.ஏ., சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு; முதல்ல படிங்க": எல்.முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தெரிந்துகொள்ள முதலில் தயவு செய்து படியுங்கள்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இது குறித்து எல்.முருகன் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து, முதலில் தயவு செய்து படியுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=enxh4tva&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ரொம்ப தெளிவாக, அதாவது பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கப்பட்டு, அங்கு அவர்களால் வாழ முடியாத சுழல் ஏற்படும் போது, இந்தியாவிற்கு வந்து அடைக்கலம் புகுந்து, 2014ம் ஆண்டிற்கு முன்பில் இருந்து இருப்பவர்களுக்கு குடியுரிமை கொடுக்கிறோம். வெளிநாட்டு இந்து, கிறிஸ்தவர் உட்பட பலர் நலன் அடைகிறார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை