உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாருங்கள் வலிமையாவோம்: அதிமுக.,வினருக்கு திமுக அமைச்சர் அழைப்பு

வாருங்கள் வலிமையாவோம்: அதிமுக.,வினருக்கு திமுக அமைச்சர் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும் என அதிமுக.,வினர் திமுக.,வில் சேர அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t0ick12f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. அக்கட்சியின் ஓட்டு சதவீதம் கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறியது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் கணிசமான ஓட்டுகள் பா.ஜ., கூட்டணிக்கு சென்றுவிட்டதாகவும் கருதப்படுகிறது.இதனால் அதிமுக.,வை ஒருங்கிணைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியானது. சிலர் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். திமுக.,வை சேர்ந்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், ''கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளே இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். நிர்வாகிகள் இபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுப்பதால் அதிமுக தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும்'' என அதிமுக.,வினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

K.SIVARAMAN.
ஜூலை 12, 2024 10:00

அப்ப 2026 சந்தேகம் தான். அப்ப இலவசங்கள் வாரி வழங்குங்கள் கஜான காலியாகும் வரை.


அண்ணாமலை ஜெயராமன்
ஜூலை 12, 2024 09:06

அப்ப பலவீனம் ஆகிவிட்டது திமுக என்று ஒத்து கொள்கிறார்


Durai Kuppusami
ஜூலை 12, 2024 08:30

நீயே அதிமுகாவில் இருந்து போன ஓடுகாலி அதிமுக தொண்டன் அப்படி அல்ல .. முதலில் நீ உணரவேண்டும்


Rajasekar Jayaraman
ஜூலை 12, 2024 07:51

இனம் இனத்தோடு சேர பொது அழைப்பு கொள்ளையர்கள் ஒன்று சேர அழைப்பு.


Bellie Nanja Gowder
ஜூலை 12, 2024 07:02

இது தான் அண்ணாமலை effect.


ராமகிருஷ்ணன்
ஜூலை 12, 2024 05:06

திமுகவின் ஓட்டு 6 சதவீதம் குறைந்து விட்டது.. இனிமேல் சில்லறை அல்லக்கை கட்சிகள் கூட்டணி எடுபடாது என்று அதிமுகவினரை அழைக்கிறார்கள். பி ஜே பி யின் வளர்ச்சி இவர்களின் அஸ்திவாரத்தை நொருக்கி விட்டது.


Anwar
ஜூலை 12, 2024 10:53

ஒரு வளச்சியும் இல்லே சும்மா காமெடி பண்ணி கிட்டு


R.Varadarajan
ஜூலை 12, 2024 03:53

அண்ணாமலையையே தனக்கு போட்டியாளனாக கருதிய பதவிப்பித்தன் எடக்கு முடக்கு தன்னுடைய பெரியண்ணன் மனப்பான்மையை விட்டுக்கொடுத்து திராவிடக்கொள்கைக்காக திம்கவுடன் கை கோர்ப்பாரா? திம்க கூட்டணி உடையும் பயத்தில் கூட்டுக்கொள்ளையனுடன் பங்காளி உறவாடத்துடிக்குதோ ?


Marshal Thampi
ஜூலை 11, 2024 23:42

அதிமுகவை வலிமைப் படுத்தச் சொல்லுங்கள். திமுகவும் அதிமுகவும் வலிமையோடு இருந்தால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் இரட்டைத் துப்பாக்கியாக இயங்கும். அது தமிழகத்துக்கு நல்லது. அன்று இந்திய மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல் இருந்ததால் தான் அன்னியன் இந்தியாவை அடிமைப்படுத்தி தான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:21

ஆமாம் இரட்டை குழல் துப்பாக்கியாக தமிழகத்தின் கனிம வளங்கள் கொள்ளையடிக்க திமுக அதிமுக மட்டும் போதும். திமுக அதிமுகவிற்கு தமிழகத்தை பட்டயம் எழுதி கொடுத்து விட்டு எப்போது எந்த இலவசம் கிடைக்கும் என்று மக்களை ஆ என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க செய்து 500 ரூபாய் குவார்ட்டர் பிரியாணி கொடுத்து வோட்டு போடச் சொல்லவும்.


KUMARAN TRADERS
ஜூலை 11, 2024 21:26

தாங்கள் கொள்ளையடித்த காசை பாதியை எங்களுக்கு கொடுத்தால் வர தயார்


R.MURALIKRISHNAN
ஜூலை 11, 2024 21:06

திருடர்களை கொள்ளையர்கள் அழைத்தது போல ....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி