| ADDED : நவ 20, 2025 01:07 AM
தமிழகத்தில் 80 லட்சம் வாக்காளர் நீக்கப்படுவர் வாக்காளர் திருத்தப் பணி வாயிலாக, இந்தியர்களின் ஒரு பகுதியினரின் குடியிருப்பை காலி செய்யும் உள்நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இது, மக்களின் உரிமையை பறிக்கும் செயல். குறுகிய காலத்துக்குள், தமிழகத்தில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து, வாக்காளர் பதிவை சரிபார்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இதனால் தான், நாங்கள் வாக்காளர் திருத்தப் பணியை கடுமையாக எதிர்க்கிறோம். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் வாயிலாக, 80 லட்சம் முதல் ஒரு கோடி வாக்காளர் நீக்கப்படுவர் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதற்கான பின்னணி குறித்து பார்க்க வேண்டும். பீஹாரிகள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் தவறான பிரசாரம் செய்துள்ளார். அது, அங்கிருக்கும் மக்களால் ஏற்கப்பட்டிருக்கலாம். - சுப்பராயன் எம்.பி., இந்திய கம்யூ.,