உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதி குடிநீர் தேவைகளுக்காக, திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையை ஒட்டி, சிறுதாவூர் பகுதியில், ஐந்து குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்த கிணற்றிலிருந்து குழாய் இணைப்புகள் வாயிலாக, பேரூராட்சி வார்டுகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்யும் பணியுடன், புதிய குழாய் இணைப்பு அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.ஆமூர்- - சிறுதாவூர் இடையே உள்ள தென்னந்தோப்பு பகுதியில், புதிய குழாய் பதிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. வேலை முடிந்த பின்பும், அந்த பள்ளத்தை மூடாமலேயே விட்டுவிட்டனர். தடுப்பும் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், ஆமூர் பகுதியை சேர்ந்த தேவராஜ், 30, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் திருப்போரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளத்தில், மண் சறுக்கி நான்கு பேரும் பைக்குடன் விழுந்தனர்.இதில், தேவராஜ் சுயநினைவு இழந்தார். 2 வயது குழந்தை மோகித், படுகாயம் அடைந்தான். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், குழந்தை மோகித் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று 5:30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை மோகித் உயிரிழந்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Smba
நவ 05, 2024 18:17

தண்டனை என்ன


M S RAGHUNATHAN
நவ 05, 2024 10:09

அரசின் அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து. கள்ளச் சாராய மரணமாக இருந்தால் 10 லட்சம் கிடைத்து இருக்கும். இதற்கு என்ன கிடைக்கும். வண்டி ஓட்டியவர் careful ஆக ஓட்டவில்லை. ஆகையால் நிதி உதவி கிடையாது என்றும் அரசு சொல்லலாம்.


M S RAGHUNATHAN
நவ 05, 2024 10:06

விபத்துக்கு ஆளானவர் ஹிண்டுவா அல்லது சிறுபான்மை இனத்தவரா? கான்ட்ராக்டர் வட்டம், சதுரம், பகுதி, ஒன்றியம், மாவட்டம், மந்திரி ஆகியோரின் உறவினருக்கு தூரத்து சொந்தமா? உடனே நடவடிக்கை எடுக்க. போங்க சார். நான் coimbatore போகவேணும். ஒரு 200 ரூபாய் கிடைக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 07:22

பொறுப்பற்ற மனிதர்களால் ஏற்பட்ட சோகம் ......


nagendhiran
நவ 05, 2024 06:17

நடந்தது விடியலில் என்பதால் சும்மா விடுறோம்? இதுவே எடப்பாடி ஆட்சியில் நடந்திருந்தா? ஆக எடப்பாடி பதவி விளகனும் என்று ஆரம்பித்து நேரலை? பேட்டி? போராட்டம்? என்று பொங்கியிருப்போம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை