உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் இடத்தில் பறக்கும் கொடி; திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை

கோயில் இடத்தில் பறக்கும் கொடி; திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை

மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், நிலா பிறை போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும்' என சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர். மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: கோயில் மலை மீது பழமையான தலைவிரிச்சான் மரம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து 100 மீட்டருக்கு மேல் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில்தான் நிலா பிறை போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும். கல்லத்தி மரத்திலும் நிலா பிறைபோட்ட கொடி அண்மையில் ஏற்றப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற ஆட்சேபனை தெரிவிக்காத தர்கா நிர்வாகத்திற்கு கட்சி சார்பில் நன்றி. அதேசமயம் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. டிச.,21ல் சந்தனக்கூடு விழாவில் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி மீண்டும் ஏற்ற தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை காரணம் காட்டி மரமும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் விதமாக வருங்காலத்தில் சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை ஆரம்பநிலையில் உடனே அகற்ற வேண்டும். மரத்தில் சேவல் படம் போட்ட கொடியை ஏற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

என்றும் இந்தியன்
டிச 10, 2025 15:57

ஆட்சி என்ற வார்த்தை ஆள் + சிறப்பாக குறுகி ஆட்சி ஆனது ஆனால் ஆட்சியில் அது ஆள் + சீ ஆள்பவன் சீ சீ சீ என்று பேசவேண்டும் காரியம் செய்யவேண்டும் என்று இருக்கின்றது


Suresh
டிச 10, 2025 15:24

மற்ற மதங்களில் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஹிந்துக்கள் என்று போலியாக சான்றிதழ்களில் ரகசியமாக தேவைப்படும் இடத்தில் மட்டும் குறிப்பிடும் நாத்திகர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக வெளியிடங்களில் எதிர்க்கின்றனர்.


karthik
டிச 10, 2025 14:54

வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் அவசர அவசரமாக மாநில தொல்லியல் துறையில் இருக்கும் 7 பேர் திருப்பரங்குன்ற விளக்கு தூணை ஆராய்ச்சி செய்கிறார்கள் இன்று காலை 7 மணியில் இருந்து..


Rathna
டிச 10, 2025 13:56

2047 ல் நாட்டை பாகிஸ்தானை போல மாற்ற நடக்கும் முயற்சி போல தெரிகிறது.


Rathna
டிச 10, 2025 11:35

உண்மையான முஸ்லிம்கள் தர்காஹ்வில் வழிபடுவதில்லை. இறந்தவர்களை வழிபடுவது அவர்கள் மத நூலில் முக்கியமாக, முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூத்து வேறு காரணத்திற்காக நடத்தப்படுவது போல் தெரிகிறது.


sivaram
டிச 10, 2025 11:12

கனிமொழி அக்கா வாங்க வந்து கொடியை நல்லா உயரமா ஏத்துங்க உங்களால மட்டும்தான் அது முடியும் டெல்லி லே இருந்து சீக்கிரமா வாங்க அக்கா


ஆரூர் ரங்
டிச 10, 2025 11:04

முக்கால்வாசி முஸ்லிம்கள் தர்கா வழிபாட்டுக்கு எதிராக வகாபிகளாக மாறிவிட்டனராம். ஆனால் திருட்டு முக போலி ஸ்தலத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்கிறதா?.ஆனாலும் வழக்கம் போல மிகப்பெரும்பாலான முல்லா மவுல்விகள் திமுக பக்கமே.


vbs manian
டிச 10, 2025 10:54

திருப்பரங்குன்றம் __2 அஸ்திவாரம் போடப்பட்டது.


Karunai illaa Nidhi
டிச 10, 2025 10:50

வெறியர்கள் திருந்த போவதில்லை


KavikumarRam
டிச 10, 2025 10:49

2026 தேர்தலுக்கு இப்பவே குறுக்கு வழியில இந்த கேடுகெட்டவனுங்க பிளான் பன்றானுங்க. கலவரத்தை தூண்டி கே என் நேரு, கோமாளி முருகன், மற்றும் பல ஊழல்களை திசை திருப்ப இந்த திருப்பரங்குன்ற விஷயத்தை தூண்டி விட்டுக்கிட்டே இருக்கானுங்க. கூடிய விரைவில் ஆப்பு ஆழமாக இறங்க போகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை