உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நேர்காணல்: நிர்வாகிகள் அதிருப்தி

அ.தி.மு.க., நேர்காணல்: நிர்வாகிகள் அதிருப்தி

சிவகங்கை: சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் பெயரளவில் நடத்தப்பட்டதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து பிப்.21 முதல் மார்ச் 6 வரை பொதுத் தொகுதிகளுக்கு ரூ.20 ஆயிரம், தனி தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது.2450க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு பெற்றவர்களுக்கு நேர்காணல் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்தன. இதில் சிவகங்கை மாவட்டம் சார்பாக 40க்கும் மேற்பட்டோர் நேற்று நேர்காணலில் கலந்து கொண்டனர். இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், இளையான்குடி ஒன்றிய செயலாளர் கோபி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மானாமதுரை நகராட்சி கவுன்சிலர் கங்கா உள்ளிட்டோரை மட்டும் அழைத்து பொதுச் செயலாளர் பழனிசாமி நேர்காணல் செய்துள்ளார்.மாஜி அமைச்சர் பாஸ்கரன் மகன் கருணாகரன் உட்பட மற்ற நிர்வாகிகளை நேர்காணலே செய்யவில்லை. இதனால் நேர்காணலுக்கு சென்ற மற்ற நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை