உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக உட்கட்சி தேர்தல்: தலையிட தேர்தல் ஆணையம் மறுப்பு

அதிமுக உட்கட்சி தேர்தல்: தலையிட தேர்தல் ஆணையம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து, உட்கட்சி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை. சர்வாதிகாரமாக நடந்தது. நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக்கூறியிருந்தார்.இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‛‛ அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை'' எனக்கூறியது.இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி , மனுவை தள்ளுபடி செய்ததுடன் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
பிப் 06, 2024 15:30

மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கிலுக்கு உள் கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணைய விதிமுறைகள் தெரிந்து, அதனை மேற்கோள் காட்டி மனுதாக்கல் செய்து இருக்க வேண்டும். திமுக, பாட்டாளி.. கட்சிகள் தேர்தல் எப்போதும் நேர்மை என்று கூற முடியாது. குடும்ப சர்வாதிகாரம் தான்.? தொண்டர்கள் ஏற்பு. முறையிடுவது இல்லை. மனுதாரர் தடுக்க மாற்று வழி சொல்ல வேண்டும். நீதிமன்ற நேரம் வீணடித்து, பணியை திசை திருப்ப தான் உதவும். நிர்வாக விதியை தவறாக பயன்படுத்திய போது தான் நீதிமன்றம் தலையிட முடியும். மக்களுக்கு தான் நீதிமன்றம். அரசு அதிகாரிகள் விதி மீறினால், நிர்வாகம் அதிகம் தண்டிக்க முடியாது. அரசு அதிகாரிகள் நீதிமன்றம் நாடி தண்டனை பெற்று தருவர். நீதிமன்ற பணிகள் திசை திருப்ப பட்டு வருகின்றன.


வெகுளி
பிப் 06, 2024 15:22

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பழனிச்சாமியின் தலைமை பெரும் சுமை என்பதை அதிமுக உணரும்....


Kadaparai Mani
பிப் 06, 2024 16:58

அதிமுகவை தொண்டர்கள் பார்த்து கொள்வர் .அதிமுகத்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி .உங்கள் கட்சியை சாவர்க்கர் கொள்கை சொல்லி தமிழக கிராமங்களில் வளர்க்க பாருங்கள் .-நூறுவருடங்களில் தமிழகத்தில் உங்கள் ஆட்சிதான்


பெரிய ராசு
பிப் 06, 2024 17:09

வேயென நீ போரேயா ராஜா


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ