மேலும் செய்திகள்
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
1 hour(s) ago
வாடகைக்கு ஓடும் சொந்த வண்டி: ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
1 hour(s) ago | 1
நவம்பர் ரேஷன் பொருட்கள் இம்மாதம் சேர்த்து தர முடிவு
1 hour(s) ago | 1
சென்னை: டிஜிட்டல் கைது என்ற பெயரில் தன்னை மோசடி செய்ய முயற்சித்தது குறித்து, அதிமுக எம்பி சண்முகம் பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.நம் நாட்டில், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன. போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், 'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது ஆகும். அந்தவகையில், தன்னை டிஜிட்டல் கைது செய்ய நடந்த மோசடி முயற்சி குறித்து, அதிமுக எம்பி சண்முகம் புகார் அளித்து இருக்கிறார். டில்லி பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: காலையில் பார்லிமென்டிற்கு செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் என்னை ஒரு பயங்கரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னைக் கைது செய்யப் போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டாவது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாகக் கூறினார்.இந்த குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்கள் மாறி இருக்கின்றனர். இது அச்சுறுத்தல்கள் விடுப்பது அதிகரித்து இருப்பதற்கு ஒரு சான்றாகும். விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago | 1
1 hour(s) ago | 1