உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லோரும் ஒரே நேரத்தில் வேட்புமனு கொடுங்க: அதிமுக வேட்பாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு

எல்லோரும் ஒரே நேரத்தில் வேட்புமனு கொடுங்க: அதிமுக வேட்பாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 25ல் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.ஏப்.,19ல் தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 25ம் தேதி மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ragagV
மார் 23, 2024 04:10

hi


SPugazh
மார் 22, 2024 13:54

புலியை பார்த்து பூனை சூடு போட்டதுபோல இருக்கு. இவருக்கு MGR, ஜெ என்று நினைப்பு.


மோகனசுந்தரம்
மார் 22, 2024 13:37

ஹலோ மிஸ்டர் எட்டப்ஸ், உங்க துரோக செயல், திமிர் அடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. அது வரையில் உன் இஷ்டம்போல் ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை