உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்வழித்தடங்களை தூர்வார ரூ.115 கோடி ஒதுக்கீடு

நீர்வழித்தடங்களை தூர்வார ரூ.115 கோடி ஒதுக்கீடு

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மாநிலம் முழுதும் சிறப்பு துார்வாரும் பணிக்கு, 115 கோடி ரூபாயை முன்கூட்டியே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கின்றன.எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்னதாக, சென்னை மண்டல நீர்வளத்துறையில் உள்ள இம்மாவட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இப்பணிக்கு ஆண்டுதோறும், 20 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, திருச்சி மண்டல நீர்வளத்துறையில் உள்ள டெல்டா மாவட்டங்களிலும், ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக துார்வாரும் பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படுகிறது.கோவை மற்றும் மதுரை மண்டலங்களிலும் துார்வாரும் பணிக்கு நிதி வழங்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நடப்பாண்டு, டெல்டா மாவட்டங்களுக்கு, 95 கோடி; சென்னை மண்டலத்தில் கடலுார் மாவட்டத்திற்கு 15 கோடி; மதுரை மண்டலத்திற்கு 4 கோடி; கோவை மண்டலத்திற்கு 1 கோடி என 115 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியில் 5,814 கி.மீ.,க்கு நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணி விரைவில் துவங்க உள்ளது. 1,004 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யும் பணிகளில் நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நரேந்திர பாரதி
பிப் 11, 2024 04:59

அப்போ இதுவரைக்கும் நாலாயிரத்து நூத்தி பதினைந்து கோடி செலவு செஞ்சிருக்கீங்க...போதும்டா, விடியல்களா...பூமி தாங்காது


ராஜா
பிப் 10, 2024 10:11

எவ்வளவு வேகமாக அடைக்கிறது? இப்போ தான் நாலாயிரம் கோடிகளை செலவு செய்து அதை தூர் வாரினோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த வருடம் மழையிலும் சென்னையில் போன முறை போல் கண்டிப்பாக வெள்ளம் வரும்.


நரேந்திர பாரதி
பிப் 11, 2024 05:02

நீர்வழித்தடங்களில் துார்வாரும் குப்பையை நீர்வழித்தடங்களிலேயே கொட்ட வேண்டும்...அப்போதான் மீண்டும், மீண்டும் கான்ட்ராக்ட் கொடுக்கலாம்..இதுதான் திருட்டு திராவிடியா மாடல்


ஆரூர் ரங்
பிப் 10, 2024 09:12

இந்த பேக்கேஜ் அமவுண்ட் ஒரே ஒரு தொகுதி பிரச்சாரத்திற்கு கூட போதாதே.


ராஜா
பிப் 10, 2024 17:09

தேர்தலில் எத்தனை தொகுதிகள் வென்றாலும் அதை வைத்து திமுக


sankar
பிப் 10, 2024 08:47

ஒதுக்கீடு என்பது ஒதுக்குவதற்கே - என்பது திரவிட மாடல் சித்தாந்தம்


Ramesh Sargam
பிப் 10, 2024 07:56

மீண்டும் கூவத்தில் போட் விடப்போறீங்களா..??


S.F. Nadar
பிப் 10, 2024 15:09

என்ன செய்தாலும் நீ இப்படி தன பேசுவ ?? கேவலம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி