உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை விளக்கம்

அமித்ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமித்ஷா தனக்கு அறிவுரை தான் கூறினார் என தமிழிசை விளக்கம் அளித்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழிசை கூறியது, சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா அறிவுரை தான் கூறினார். தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பணிகள், தேர்தலில் மேற்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l3fmiag4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Hakkim
ஜூன் 14, 2024 20:42

???????????????


venugopal s
ஜூன் 14, 2024 18:00

பலமாக வலிக்கும் அளவுக்கு அடிக்கவில்லை,லேசாக அன்பாக தட்டிக் கொடுத்தார் என்று சொல்கிறாரா?


venugopal s
ஜூன் 14, 2024 18:00

பலமாக வலிக்கும் அளவுக்கு அடிக்கவில்லை,லேசாக அன்பாக தட்டிக் கொடுத்தார் என்று சொல்கிறாரா?


தமிழகத்திலிருந்து
ஜூன் 14, 2024 12:37

என்ன தமிழகத்துக்கு அறிவுரை சொல்றது, இந்த முறை அண்ணாமலைக்காக சற்று ஓட்டு கிடைத்தது, அடுத்த முறை பாஜகவிற்கு எதுவுமே கிடைக்காது தமிழகத்திலிருந்து ???


Alagusundram KULASEKARAN
ஜூன் 14, 2024 12:15

சில வேளை புதுச்சேரி சென்று கட்சி பணியில் ஈடுபட கூறி இருக்கலாம் இவர் மறுத்து இருக்கலாம்


Vadivelraj
ஜூன் 14, 2024 10:06

பச்ச பொய், அப்படி என்றால் அன்றே சொல்லவேண்டியது தானே ஏன் ஒருநாள் புல்லா சொல்லாமல் இழுத்துட்டு எல்லா சேனல் பரப்பிவிட்டு நல்ல மனிதர் பெயரை கெடுத்துவிட்டேங்க.


DINAKARAN T S
ஜூன் 14, 2024 09:55

இவர்களுடைய அவசரத்தில் திமுகவில் செஞ்சி மஸ்தான் மாநில செயலாளர் தூக்கியதை விவாதம் ஆக்கவில்லை. இது தான் சார்பு ஊடகம் என்று சொல்வது.


Mohamed Ibrahim
ஜூன் 14, 2024 07:43

சும்மா பேசிக்கிட்டு இருந்ததுக்கா இந்த அக்கப்போரு.....


Sbnagarajan 42kkst South St Aruppukottai
ஜூன் 14, 2024 07:23

அவர்கள் கட்சி பிரச்சினை இதில் மற்றவர்கள் தலையிட முடியாது


SP
ஜூன் 14, 2024 07:05

இவரை மட்டுமல்ல தமிழக பாஜக வில் உள்ள சீனியர்கள் எல்லோரையுமே ஒதுக்கி வைப்பது,கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை