உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை

வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை

சென்னை: அனைவரையும் மிரட்டுவது போல என்னை வழக்கு வழக்கு என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மிரட்டுவதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட செல்வப்பெருந்தகை, அதில் கூறியிருப்பதாவது: எல்லாரையும் மிரட்டுவதுபோல என்னையும் வழக்கு.. வழக்கு.. என அண்ணாமலை மிரட்டுகிறார். என் வழக்கு தன்மை அவருக்கு தெரியவில்லை. என்னை குற்றவாளி என சொல்லும் போலீசிடம், என் வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என சொன்னவர்கள் நாங்கள். உயர்நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எவ்வளவு பேரை துன்புறுத்தியிருப்பார், எவ்வளவு பேரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார் என்பது இப்போது புரிகிறது.

விசாரிக்க கோரிக்கை

அதனால் தான் நீண்ட நாட்களாக பணியில் நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிறார். இது பற்றி கர்நாடக முதல்வர், துணை முதல்வரிடம் விசாரிக்க கோரியுள்ளேன். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். ஆனால் நீ (அண்ணாமலை) அப்படியில்லை. பல மடங்களை பிடித்து, சாமியார் கால்களில் விழுந்து, எதற்காக வந்திருக்கிறாய் எனத் தெரியும். என் பின்னால் உண்மையான சக்திவாய்ந்த மக்கள் இருக்கின்றனர். உன் பின்னால் வியாபாரிகள் தான் இருக்கின்றனர்.

வெறுப்பு அரசியல்

வாழ்க்கையும், அரசியலும் நிரந்தரமில்லை. ஆனால், உண்மையுடன் மக்கள் சேவை செய்பவனே தலைவன். உன்னை மாதிரி வெறுப்பு அரசியல் செய்பவன் தலைவன் அல்ல. இதுவரை நீ யாரை திட்டவில்லை? யாரை கடிக்கவில்லை? நீ யாரை விட்டு வைத்துள்ளாய்? என் தாய் என்னை பார்த்து பெருமைப்படுவார்; ஆனால் உன்னுடைய தாய் உன்னைப்பற்றி பெருமைக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இறந்தவர்களை கூட குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் என கூறி வருகிறாய்.

கோழைகள்

ஒருவரை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும், சங்கடப்பட வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அண்ணாமலை. அவர் சொல்லி யாராவது சங்கடப்படுவார்கள் எனில் அவர்கள் கோழைகள். ஒரு சாமானியன் மீது வழக்கு போட்டு அவ்வளவு துன்புறுத்தி, உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பே என் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியது. என் வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை படித்து பாருங்கள் அண்ணாமலை. இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

tmranganathan
ஜூலை 25, 2024 08:07

உந்தலைவனும் சோனியாவும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று உலா வருகின்றனர். இரண்டாயிரம் கோடி பணம் ஆட்டை போட்டதால். நீயும் அதே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைதான்..


Kaliraja Thangamani
ஜூலை 23, 2024 16:27

சக மனிதரை மரியாதையாக பேச தெரியாத இவர் எல்லாம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் . காமராஜர் இருந்த இடம் . காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவனில் குற்ற பின்னணியுடன் இருக்கும்


kumarkv
ஜூலை 14, 2024 15:54

நாங்கள் சின்ன ரௌடி இருந்து படிப்படியாக வளர்ந்து


sundarsvpr
ஜூலை 14, 2024 15:44

குற்றமுள்ள நெஞ்சு வசனப்படும். அதனால்த்தான் அண்ணாமலையை சீண்டுகிறார். தி மு க குடும்பத்தில் ஒண்டு குடித்தனமாய் உள்ளது


K V Ramadoss
ஜூலை 13, 2024 12:31

ஹும்...என்ன அரசியல் இது ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதுதான் இன்றைய அரசியல்.. ஆக்கபூர்வமாக பேசத்தெரியவில்லை..தரம் மிக தாழ்ந்துகொண்டுவருகிறது...


Ranganathan
ஜூலை 13, 2024 08:45

THE RESPONSE FROM MR.


tmranganathan
ஜூலை 14, 2024 08:07

இந்தாலின் போட்டோ போலீஸ் ஸ்டேஷனில் ஒட்டப்பட்டு இருந்தது நான் வீட்டில் திருட்டு புகார் கொடுக்க சென்ற பொது. யாருன்னு கேட்டேன் போலீஸ்காரர் இந்தாள் இப்போ தமிழக காங்கிரஸ் தலைவர்ன்னாரு. வேடிக்கைதான்.


Ramanathan Pillai
ஜூலை 12, 2024 20:26

அண்ணாமலை செல்வக் பெருந்தொகையைப்பற்றி கூறிய கருத்துக்களை செபெ மறுக்கவில்லை. ஆதாரத்தோடு கூறப்பட்ட குற்றச்சாட்டு களுக்கு ஆதாரத்தோடு மறுப்பு தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து தரக்குறைவாக அறிக்கை விடுவதில் இருந்து பழைய வாழ்க்கை அடிதடி குற்றப்பின்னணி நிறைந்தது என்பது தெளிவாகிறது. அதிகமா ஊளையிட்டால் அதிக ஆதாரங்கள் வெளியே வரும். லண்டன் சொத்து உட்பட.....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:48

உங்கள் பின்னால் எத்துணை சக்தி வாய்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்று கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வரும் 2026 தேர்தலில் தனித்து நின்று நிரூபித்து காட்டுங்கள் சார் அப்போது தான் இந்த அண்ணாமலை அடங்குவான். அண்ணாமலை மீது வழக்கு போடுங்கள் சார் அவனிடம் என்ன ஆதாரம் உள்ளது என்று பார்க்கலாம். இந்த கர்நாடக காங்கிரஸ் அரசிடம் சொல்லி அண்ணாமலையை பற்றி விசாரிக்க சொல்லுங்கள். நீங்கள் பின்னால் இருக்கும் திமுக சரியாக விசாரிக்கவில்லை போலும். நீங்களாவது முயற்சி எடுத்து அண்ணாமலை மோடியை ஒழித்து கட்டுங்கள். நீங்களா அண்ணாமலையா என்று பார்த்து விடலாம். மறக்க வேண்டாம் சார் 2026 தேர்தலில் காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி போல் தனித்து நிற்கிறது காங்கிரஸ் பலத்தை உலகறியச் செய்ய வேண்டும்.


R K Raman
ஜூலை 12, 2024 13:16

அவ்வாறு செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு கவுன்சிலர் தேர்தல் போதும்


K.Muthuraj
ஜூலை 12, 2024 20:10

நீங்கள் நவீன சகுனி என்று நினைக்கிறேன். உங்கள் பேச்சை கேட்டு அதன்படி செயல்பட்டு, ...., எப்படியோ காங்கிரஸ் ஒழிந்தால் சரி.


Anwar
ஜூலை 12, 2024 10:28

அந்த புழுதி இன்னும் 100 வருஷம் ஆனாலும் வரமுடியாது. அவனே ஒரு டம்மி காமெடி பீஸ்


kumarkv
ஜூலை 14, 2024 07:31

உன் மாதிரி ஆட்களை இந்தியா விட்டு ஒழிக்காதது இந்துக்களது தவறுதான்


Vijayaraman Jayaraman
ஜூலை 12, 2024 08:54

அப்படியே லண்டன் சொத்து மதிப்பும் சொல்லு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ