மேலும் செய்திகள்
தமிழகத்தில் பார் கவுன்சில் தேர்தல் நடத்த உத்தரவு
9 minutes ago
மன்னார் வளைகுடா நோக்கி நகருது காற்றழுத்த தாழ்வு
54 minutes ago
சென்னை: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, மத்திய அரசு உத்தரவுப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பிற்கு ஒரு தலைவர், இரண்டு நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், இரண்டு நீதித் துறை சாராத உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதன்படி, லோக் ஆயுக்தா தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமாணிக்கம், பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதித்துறை சார்ந்த உறுப்பினராக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ேஹமலதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
9 minutes ago
54 minutes ago