உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக, த.மா.கா நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக, த.மா.கா நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பெண் வழக்கறிஞர் மலர்கொடி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=do54elgk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கைது செய்யப்பட்டவர்களை இதுவரை விசாரித்ததில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் குறித்து ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருள் மற்றும் வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரனிடம் நாள் முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அருள், மலர்க்கொடிக்கு இடையே லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் மலர்கொடியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் ஹரிஹரனும் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஜூலை 18, 2024 20:42

ரவுடிகளில் இஸ்லாமியர்கள் இருப்பதில்லை ......


இவன்
ஜூலை 19, 2024 04:53

பாய் பொய் பேசலாம் ஏக்கர் கணக்குல பேச கூடாது, நீங்க அருவா வா எடுப்பிங்க ??


Iniyan
ஜூலை 18, 2024 19:33

வழக்கறிஞர்கள் எல்லாம் இப்போது ரௌடிகளாகி விட்டனர் . இன்றைய வழக்கறிஞர் நாளை நீதிபதி. நல்ல விளங்கும் நீதி துறை.


Barakat Ali
ஜூலை 18, 2024 20:41

.நீங்கள் கூறும் அவலநிலை திராவிடக்கட்சிகளால்தான் ஏற்பட்டது ..... இனி தமிழகத்துக்கு நிம்மதி என்பது ஏது ??


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2024 19:17

ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், கத்தி எது தேவலாம் என்று இவற்றை ஒப்பிட்டு துக்ளக்கின் அட்டைப்படத்தில் அவ்வப்போது கார்ட்டூன் வரும் .... அதுதான் நினைவுக்கு வருகிறது ....


Vathsan
ஜூலை 18, 2024 18:41

கொலையில் சம்பத்தப்பட்ட பிஜேபி நிர்வாகியை நீக்கவில்லையே இன்னும்.


Pandi Muni
ஜூலை 18, 2024 19:17

அதானே நீ இன்னுமா வெளியே திரியிரே


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2024 19:18

நீங்கள் புகார் கொடுக்கவில்லையா இன்னும் ????


வாய்மையே வெல்லும்
ஜூலை 18, 2024 15:06

திருட்டு பயபுள்ளை ரவுடியிசம் செய்யும் அடாவடி பேர்வழிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊடுருவிவிட்டுள்ளனர் போலும். இது ஒரு அருவருக்கத்தக்க உதாரணம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி