உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்; உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்; உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 38. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக உள்ளார்; ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்த வீடு கட்டி வருகிறார்; இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, 43, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 45, ஆகியோர், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டனர். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை ராஜேந்திரன் வழங்கியுள்ளார்.மீதமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்தனுப்பினர். அதை எடுத்து கொண்டு சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அவர், உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார். அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த தொகை போதாது என்றும், மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

scomments
பிப் 17, 2025 07:52

தமிழ் நாட்டில் மிகவம் மிகவும் மோசமான கேவலமான துறை. இது எப்படி மாண்புமிகு முதலமைச்சரக்கு தெரியாமல் இருக்கும் என்று தெரியவில்ல.


அனிதா
பிப் 16, 2025 16:55

பக்திப் பழமா இருக்காங்க.


kulandai kannan
பிப் 16, 2025 10:56

இழிபிறவிகள். குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2025 10:02

, யாரோ சம்பாதித்த பணத்தில் உன் மனைவிக்கு நகை மாட்டி நீ அழகு பார்க்க வெட்கமாக இல்லையா?


Minimole P C
பிப் 16, 2025 08:21

2 lakhs for a housing connection is small a amount for dravidian parties sponcered loot in Govt. offices.


Minimole P C
பிப் 16, 2025 08:16

Duputies of Senthil


jayvee
பிப் 16, 2025 07:58

பெயில் கிடைத்து மீண்டும் துறையை ஆளும் தலைவர் இருக்கலாம் கேவலம் இரண்டு லச்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தண்டனையா? நீதி செத்துவிட்டது


VENKATASUBRAMANIAN
பிப் 16, 2025 06:50

இவர்கள் மாட்டிக்கொண்டார்கள் இன்னும் எவ்வளவோ பேர் உள்ளனர். உடனே டிஸ்மில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை போய்விடும் என்ற பயம் வரும்.


seshadri
பிப் 16, 2025 02:11

ஒருவர் பல துறைகளில் லஞ்சம் என்று எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் லஞ்சம் இல்லாத துறை என்று ஒரு துறையை காட்ட முடியுமா நூறு சதவிகிதம் எல்லா துறைகளும் லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கின்றன. தலைவர்கள் எப்படியோ அப்படித்தானே அதிகாரிகளும் இருப்பார்கள்.


தாமரை மலர்கிறது
பிப் 16, 2025 01:18

திராவிட குஞ்சுகளின் லட்சணம் வெளிப்பட்டு நிற்கிறது.