உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்திக்கு பைக் யாத்திரை தடை விதித்தது தமிழக போலீஸ்

அயோத்திக்கு பைக் யாத்திரை தடை விதித்தது தமிழக போலீஸ்

கோவை: உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, சாலை மார்க்கமாக கோவையிலிருந்து பைக் யாத்திரை மேற்கொள்ள, கோவை மாவட்ட பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவர் இந்துஷா காஞ்சி நேற்று திட்டமிட்டிருந்தார்.அவரை வழியனுப்பி வைக்க, கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட பா.ஜ., பிரமுகர்கள் நேற்று காலை, ராம் நகரிலுள்ள கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்தனர்.அங்கு சிறப்பு வழிபாடுகளை நிறைவு செய்த இந்துஷா காஞ்சிக்கு, கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் வெற்றித் திலகமிட்டு, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.இதையடுத்து, போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் தலைமையில், ஏராளமான போலீசார் கோதண்டராமர் கோவில் முன்பாக திரண்டனர். 'பைக்கில் யாத்திரை செல்ல அனுமதி இல்லை; மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்' என்று எச்சரித்தனர்.இதையடுத்து, பா.ஜ.,வினர் போலீஸ் அனுமதி வேண்டி கடிதம் கொடுத்தனர்.பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''தமிழகத்தில் தனிநபர் ஆன்மிக யாத்திரை செல்வதற்கு கூட போலீசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹிந்துக்களின் 500 ஆண்டு கனவு, ராமர் கோவில். அது தற்போது நிறைவேறி உள்ளது. ''அதற்கான வேண்டுதல் தான் பைக் யாத்திரை. அதை நிறைவேற்ற பக்தர் ஒருவர் செல்கிறார். அனுமதி என்ற பெயரில், பக்தி விஷயத்தில் அரசியலை கலக்கின்றனர். ''சட்டத்தை மதிக்கிறோம். அதனால் யாத்திரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், யாத்திரை நடக்கும்” என்றார்.

திட்டம் பணால்!

பைக் யாத்திரையை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்று, கோவை போலீசாருக்கு நேற்று அதிகாலை உத்தரவு வந்தது. அதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப, உதவி கமிஷனர் கணேஷ் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ.,க்கள், 20 போலீசார் ஆகியோர் கோதண்டராமர் கோவில் முன்பாக திரண்டனர். இதை புரிந்து கொண்ட பா.ஜ.,வினர், போலீசாருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், அனைத்து மீடியாக்களையும் கோதண்டராமர் கோவில் முன் வரவழைத்தனர். ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்படுவதாக பத்திரிகையாளர்களிடம் விளக்கிக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

seshadri
ஜன 20, 2024 12:26

. இடித்துரைப்பர் இல்லா ஏமரா மன்னன் .


ArGu
ஜன 18, 2024 19:53

ஓட்டு மற்றும் ஒட்டு போட்டவன் எல்லாம் நாண்டுக்கிங்க


Ramesh Sargam
ஜன 16, 2024 00:32

நீங்க பைக்குல கோபாலபுரம் செல்கிறேன், முதலமைச்சரை சந்திக்க செல்கிறேன் என்று கூறுங்கள், உடனே அனுமதி கொடுப்பார்கள்.


Ramesh Sargam
ஜன 16, 2024 00:30

ஒரு ஹிந்து பெண்மணி பைக் யாத்திரை செல்வதை அரசு தடுத்து நிறுத்தவே கூடாது. அது அவரின் தனிப்பட்ட விருப்பம். மிகவும் மோசமான, மிகவும் ஹிந்துக்களை எதிர்க்கும் ஆட்சி தமிழகத்தில் இப்பொழுது நடக்கிறது. போலீஸ் துறை, திமு அரசின் கைக்கூலிகளாக பணிபுரிகின்றனர்.


NicoleThomson
ஜன 15, 2024 20:10

இது என்ன அக்கிரமம் , முஹம்மது கோரியின் ஆட்சியை கண்கூடாக காணும் பாக்கியத்தை இந்த அரசு காட்டுகிறது


Rajagopal
ஜன 15, 2024 20:00

சி ஏ ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் தெருக்களை மறைத்து போராட்டம் நடத்தியபோது போலீசார் ஒருவம்புக்கும் போகாமல், தூரத்தில் நின்றுகொண்டு வேறு யாரும் அந்த வழியில் போகாமல் பார்த்துக்கொண்டார்கள். நமக்கும் காலம் கூடிய சீக்கிரத்தில் வரும். திராவிட அராஜகம் ஒழியும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


AMSA
ஜன 15, 2024 19:48

நீங்கள் பைக்குல மெக்காவுக்கு போகிறேன் என்றால் அனுமதி கிடைக்கும் இந்த நாட்டில்


வாய்மையே வெல்லும்
ஜன 15, 2024 18:28

மலஜலம் கழிக்கக்கூட இனிமே ஹிந்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படும்.. என்ன கேடுகெட்ட அரசியல் செய்யறீங்க தீயமூர்க்க பாய்ஸ் ?


Krishnamurthy Venkatesan
ஜன 15, 2024 18:01

தமிழக பொலிஸாருக்கு இது ஒரு களங்கம். பாஜக வளர்ந்து கொண்டே வருகின்றது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.


Ganapathy
ஜன 15, 2024 16:48

இந்த ஹிந்துவிரோத திருட்டுத்திராவிடிய களவாணிகழக ஆட்சில ஸனாதனத்தை ஒழிக்க இன்னும் ஜஸியா வரி மட்டும்தான் ஹிந்துக்கள் மீது விதிக்கவில்லை. கூடிய விரைவில் ஏதாவது பாதிரி முல்லா ஆசியில் அதுவம் நிறைவேறும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை