உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகியாக பி.ஏ.முரளி நியமனம்

சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகியாக பி.ஏ.முரளி நியமனம்

சென்னை:சிருங்கேரி சாரதா பீடத்தின் நிர்வாகி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, பி.ஏ.முரளி நியமிக்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக, சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியார் 12 நுாற்றாண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் சிருங்கேரியில், ஸ்ரீசாரதா பீடத்தைநிறுவினார். துவங்கப்பட்ட நாளிலிருந்து சிருங்கேரி மடம், சாஸ்திரங்களில் புலமை கொண்ட ஜகத்குருக்களின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார்கள் சனாதன தர்மம் மற்றும் அத்வைத தத்துவங்களை பிரசாரம் செய்து, அனைத்து பக்தர்களுக்கும் கருணையுடன் அருள் புரிந்து வருகின்றனர். பீடத்தின் தற்போதைய 36வது ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், புலமை, தவத்திற்காக போற்றப்படுகிறார். பல்வேறு விவகாரங்களை நிர்வகிக்க, நம் தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு பல ஆண்டுகளாக வழிகாட்டி வருகிறார்.அவரது உத்தரவுப்படி, சிருங்கேரி மடத்தின் புதிய நிர்வாகி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, மடத்தின் சீடரும், தீவிர பக்தியுடன் மடத்திற்கு சேவை செய்து வருபவருமான பி.ஏ.முரளி நியமிக்கப்படுகிறார். கடந்த, 1986ம் ஆண்டு முதல், மடத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த கவுரிசங்கர், புதிய தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகராக, தொடர்ந்து மடத்தில் சேவையாற்றுவார். கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட கவுரிசங்கருக்கு, சிருங்கேரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ