உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்

பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்

சென்னை:பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல், சொந்த ஊரான தேனியில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.இளையராஜாவின் மகள் பவதாரிணி, 47, பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திரைத் துறையில் தனக்கான தன்னிகரில்லா இடத்தை பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இலங்கையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு, திரையுலகைச் சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல், பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல், நேற்று இரவே சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, பண்ணைபுரத்தில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ