| ADDED : டிச 25, 2025 08:48 AM
தி ருப்பரங்குன்றத்தில் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசியல் செய்ய விரும்புகிறது. மதக் கலவரத்தை துாண்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல ஆண்டுகளாக முயற்சித்தவர்கள், இப்போது திருப்பரங்குன்றத்தில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். திருப்ப ரங்குன்றத்திற்கு வெளியூர் ஆட்களை அழைத்து வந்து, பா.ஜ.,வினர் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சதியை முறியடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தமிழகத்துக்கு தனியாக வரவில்லை; வரும்போது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை அழைத்து வந்துள்ளார். பியுஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான். பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் நடக்கும் யுத்தம், அ.தி.மு.க.,வின் இறுதி காலத்திற்கானது. தமிழகத்தில் பா.ஜ., நுழைய முடியாத ஆட்சியை உருவாக்க வேண்டும். --மாணிக்கம் தாகூர், எம்.பி., - காங்.,