உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.800 கோடி டிபாசிட் செய்யும்படி மின் வாரியத்திற்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

ரூ.800 கோடி டிபாசிட் செய்யும்படி மின் வாரியத்திற்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின்வாரியம், வடசென்னை அனல்மின் நிலையம், சென்னை பெட்ரோலியம், மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களால், வடசென்னையில் காற்று மாசு ஏற்படுவதாக, பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதில், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து மீட்பதற்கு நிதியத்தை ஏற்படுத்தவும், மணலி பகுதியில் இயங்கும், இந்த ஆறு நிறுவனங்களின் ஆண்டு வருவாயில், குறைந்தபட்சம் ஒரு சதவீதம் டிபாசிட் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மின்வாரியம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி பார்த்தால், ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வழங்க வேண்டியதிருக்கும் என்றும், மின்வாரியத்தின் நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்ற நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மின்வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''மின்வாரியத்தின் நிதி நிலைமையை பரிசீலிக்காமல், தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் மட்டும், மின்வாரியத்துக்கு 11,954 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு, 1.50 லட்சம் கோடியை தாண்டும். மின்வாரியம் தரப்பின் கருத்தை கேட்கவில்லை,'' என்றார்.இதையடுத்து, மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதியத்துக்கு, டிபாசிட் செய்யும்படி, மின்வாரியம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் ரத்து செய்தனர். உரிய நடைமுறையை பின்பற்றி, நிறுவனங்கள் வழங்க வேண்டிய இழப்பீட்டை, தீர்ப்பாயம் நிர்ணயிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
மார் 15, 2024 19:42

வில்சன் கோர்ட்டின் செல்ல குழந்தை எது கேட்டாலும் கிடைக்கும் இதை புலனாய்வு செய்ய வேண்டும்


Anantharaman Srinivasan
மார் 15, 2024 11:11

2021-22ம் ஆண்டில் மட்டும், மின்வாரியத்துக்கு 11,954 கோடி ரூபாய் இழப்பு. தமிழகத்தில் பொதுகூட்டம் நடத்த அரசியல் கட்சிகளும், ஆடிமாதம், நவராத்திரி சபரிமலை சீசன் போன்ற பண்டிகை காலங்களில் மாதக்கணக்கில் Loop போட்டு மின்சாரம் திருடுவதை தடுத்தால் நஷ்டம் ஓரளவு குறையும்.


sundarsvpr
மார் 15, 2024 10:09

இடங்கள் பிளாட்டுகளாக கட்டப்படுகின்றன. எல்லா பிளாட்டுகளிலும் காற்றோட்டம் கிடையாது. சூரிய வெளிச்சம் கிடையாது. இரண்டும் செயற்கை முறையில் கிடைக்கின்றன. இதற்கு மின் சாதனம்தான் கைகொடுக்கும். செயற்கை ஒளி ஒலி எவ்வளவு கெடுதல் என்பதனை அரசு ஏன் விளம்பரம் செய்வதில்லை. மின் கொள்முதல் என்ற ஊழலுக்கு அரசு காரணமாய் இருப்பதால்.


Kasimani Baskaran
மார் 15, 2024 05:44

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாசை கட்டுப்படுத்தாமல் மாசடைந்து எப்படி வெட்டியாக அரசு நிதியில் இயங்குகிறது என்பதை நீதிமன்றமோ / தீர்ப்பாயமோ ஒரு பொழுதும் கேள்வி கேட்காது.


மேலும் செய்திகள்