உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தாமரை சின்னத்தை பா.ஜ.,விற்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zkd92y7j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என சுட்டிக்காட்டப்பட்டது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Anbuselvan
மார் 20, 2024 23:53

சீமான் அவர்கள் இப்போ என்ன செய்வார்?


Shankar
மார் 20, 2024 22:51

போச்சா பத்தாயிரம் ஓவா?


Ramona
மார் 20, 2024 21:50

கேட்டா அவர் சமூக ஆர்வலர்.பட்டம் பெற்ற மேதாவி,உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியவர்,என்று கதை விடவேண்டும், பொழுதை போக்க கோர்ட்டில் ஒரு பெடிஷனை தட்டிவிட்டு மீடியாக்கள் தன்னை புகழ்ந்து தள்ளும் என்ற நினைப்பு. இந்த வீண் நினைப்பு தான் பொழப்பை கெடுத்தது.ரூ20000 மிக குறைந்த தொகை, இரண்டு லட்சத்தில் நிறுத்தியிருக்கனும்..


A1Suresh
மார் 20, 2024 20:18

தாமரை என்பது ஸாமவேதத்தில் கடவுளுடைய கண்களுக்கு உவமையாக சொல்லப்படுகிறது. ரிக்வேதத்திலும் அதர்வவேதத்திலும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதேபோல நான்கு வேதங்களிலும் சூரியனார் ஸவிதா என்று போற்றப்படுகிறார். எனவே இரண்டுமே மத சின்னங்களே.


jayvee
மார் 20, 2024 19:46

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மாட்டிக்கொண்ட சைமன் தும்பி


sankaranarayanan
மார் 20, 2024 19:36

பிஜேபி சின்னத்தின் பெயரையே முதல்வர் தனது மகளுக்கு வைத்துள்ளார் அதற்கு யாருமே வாயை திறக்கவே இல்லையே மவுனம் சம்மதத்திற்கு சமம்


sundarsvpr
மார் 20, 2024 19:17

உதய சூரியனும் ஒரு மதசின்னம்தான். காலையில் ஏழு ஞாயிறை அதாவது சூரிய நமஸ்காரம் ஒரு மத வழிபாடு. தாமரை உதய சூரியன. இரண்டு சின்னங்களும் சனாதன கொள்கையை சார்ந்தவை. சனாதனம் எப்படி விவாதத்திற்கு உட்பட்டதோ அதுபோல் இந்த இரண்டு சின்னங்களும். மக்கள் முடிவு மகேசன் முடிவு.


Rajinikanth
மார் 20, 2024 17:20

உண்மை தானே? தேசிய மலரை எதற்காக ஒரு கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள்?


RAMAKRISHNAN NATESAN
மார் 20, 2024 19:11

பாஜக தாமரையை தனக்குத்தானே ஒதுக்கிக்கொள்ளவில்லையே ???? சின்னம் ஒதுக்கப்பட்டபோது காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை ????


Raa
மார் 20, 2024 16:18

சமூக ஆர்வலர் ரமேஷ், நிஜமாகவே உங்களுக்கு எவ்வளவு சமூக ஆர்வம் பாருங்கள். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்ற பழமொழியின் நீங்கள் தீவிர ரசிகர்


செல்வம்
மார் 20, 2024 15:54

அப்ப காங்கிரசுக்கு கை சின்னம்.. ஒட்டு போடும் போது உள்ளே சின்னம் அனுமதி இல்லையாம். ஹாஹாஹா ????????????????????


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி