உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.276 கோடி வெள்ள நிவாரணம்!

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.276 கோடி வெள்ள நிவாரணம்!

சென்னை:புயல் மற்றும் வெள்ள நிவாரண நிதியாக, தமிழகத்திற்கு மத்திய அரசு, 276 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. 38,000 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும், 276 கோடி தருவது கஞ்சத்தனம் என, தமிழக கட்சிகள் விமர்சித்துள்ளன. கடந்த டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zjssgx9i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயல் ஓய்ந்த உடனே கனமழை வெளுத்து வாங்கியதால், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதித்தன.

பதில் தரவில்லை

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சேதங்களை சீரமைக்கவும், 37,907 கோடி ரூபாய் நிதி வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 450 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இது, வழக்கமாக வர வேண்டிய நிதி; நாங்கள் கேட்ட தொகையை தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது. மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இது பெரிய பிரச்னையாக உருவானது. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக, தி.மு.க., குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், சென்னை புயல் பாதிப்பிற்கு 285.54 கோடி; தென்மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு 397.13 கோடி என மொத்தம், 682.67 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அதில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் இருப்பு தொகை, 406.57 கோடியை கழித்து, மீதமுள்ள 276.10 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், 115.49 கோடி ரூபாய் புயலுக்கும், 160.61 கோடி ரூபாய் வெள்ளத்துக்கும் நிவாரணம் என்று தெரிவித்தது.

குறைவான தொகை

கர்நாடகாவுக்கு, 3,498.82 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு மிகவும் குறைந்த தொகை ஒதுக்கி கஞ்சத்தனம் காட்டுவதாக, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்: தமிழகம் கோரியது, 37,907 கோடி ரூபாய். உடனடி நிவாரணமாகவும், உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் தமிழக அரசு, 2,477 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்திருப்பது வெறும் 276 கோடி. இதுவும், நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய பின்னரே வந்துள்ளது. தமிழகத்திற்கு நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என, வஞ்சிக்கும் பா.ஜ., அரசின் செயலை, மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படி தான் நடந்தது. மத்திய அரசில், தி.மு.க., அங்கம் வகித்தபோது கூட, தி.மு.க., அரசு கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை. தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரணம் என, இரண்டு வகை உண்டு. முதலாவதில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தருவர். அடுத்ததில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவர். அதற்கு சில வரைமுறைகள் வைத்துள்ளனர். மாநில அரசு கேட்ட நிதியை எந்த மத்திய அரசும் இதுவரை வழங்கியதில்லை.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இது, பா.ஜ., அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல இருக்கிறது.

உத்தரவை மீறி வெளியான தகவல்

'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நிவாரண நிதி ஒதுக்கப்பட்ட விபரத்தை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். இது குறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டாம். இந்த கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகளுக்கு பொருந்தும்' என, மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.ஆனால், ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் அந்த கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல், தகவல்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Kuppan
ஏப் 30, 2024 18:57

ஐயோ கோ இது எங்க சின்னவரின்-யின் ஒருநாள் பாக்கெட் மணி, என்ன ஒரு ஒர வஞ்சனை


Karunagaran
ஏப் 30, 2024 14:49

மக்கள் வரிப்பணம் மத்திய அரசு நிதியை மொத்தமாக அல்வா கொடுத்து உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு பல டிரில்லியன் மில்லியன் கோடி மக்கள் வரிப்பணம் தங்கள் மீது முதலீடு செய்து உள்ள கட்சிகள் பதவியில் சேருமுன் உள்ள சொத்து பணம் வருமானம்/பதவியில் சேர்ந்த பின் திருடிய ஏழைகள் விவசாயிகள் தினக்கூலி வரிப்பணம் வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டும் இதை மத்திய விஜிலென்ஸ் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் பதினைந்து லட்சம் தரலாம்


Pandi Muni
ஏப் 30, 2024 14:31

திருட்டு பசங்க கிட்ட போய் இத்தனை கோடியை ஏன்யா கொடுக்கறீங்க?


Jai
ஏப் 29, 2024 00:08

திமுகா பெருந்தன்மையுடன் அந்த லாட்டரி அதிபர் வழங்கிய ரூ.600 கோடியை கொடுக்கலாமே.


kulandai kannan
ஏப் 28, 2024 21:46

4000 கோடிக்கே கணக்கு இல்லை


Venkataraman
ஏப் 28, 2024 19:59

இதற்கு முன்பு மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி கோடிக்கு திமுக அரசு கணக்கு காட்டவில்லை அந்த பணம் முழுவதும் யாருக்கு போய் சேர்ந்தது?


pandit
ஏப் 28, 2024 17:14

9௦௦௦ கோடி ஆட்டை போட்டவர்களுக்கு இது சோலப்பொரி


venugopal s
ஏப் 28, 2024 17:13

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள்


Nagarajan Thamotharan
ஏப் 28, 2024 16:41

ஆம் ஆண்டு அரசால் சென்னை வடிகால் பிரச்சினையை கட்ட்டமைக்க ஒதுக்கபட்ட சுமார் ரூ கோடி தொகையில் திட்டம் நிறைவேறியதற்கான அறிக்கையும் இல்லை ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்து விட்டதற்கான கணக்கும் வரவில்லை முறையாக திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்குமேயானால் சென்னையில் நான்கு நாட்கள் வெள்ளம் தேங்கிய காரணம் என்ன? மேலும் முழுமையாக செயல்படுத்தாமல் மீதமுள்ள வரவு செலவு கணக்கும் வெளியிடப்படவில்லை இந்த சூழலில் திருடர்கள் முன்னேற்ற கழகம் முறையாக வெள்ளபாதிப்பிற்கு உண்மை தன்மை தெரியாமல் / கணக்கீடு செய்ய தெரியாமல் ஏதோ குத்து மதிப்பாக தொகையை நிவாரணமாக மத்திய அரசிடம் கேட்டு வீண் விவாதம் செய்கிறது என்பதை அறிவாலய மூடர்கள் புரிகிறார்களோ என்னவோ தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்


பாமரன்
ஏப் 28, 2024 14:40

கரீக்ட் ரங்கிடு போன வாரம் துபாய்ல வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதுக்கு அந்த அரசுதான் காரணம்னு சொன்னால் நம்மை உம்மைப் போல் பேக்குன்னு சொல்றாய்ங்க?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை