உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர்கள் கல் மனம் படைத்தவர்கள் காங்.,தலைவர் பேட்டி

மத்திய அமைச்சர்கள் கல் மனம் படைத்தவர்கள் காங்.,தலைவர் பேட்டி

திண்டுக்கல்:''வயநாட்டிற்கு இதுவரை மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. காரணம் அவர்கள் கல் மனம் படைத்தவர்கள்''என,காங்.,மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் துாய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டுள்ளோம். ஒப்பந்தாரர்கள் முறையாக சம்பளம் வழங்கவில்லை. மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் என குற்றம்சாட்டுகின்றனர். துாய்மை பணியாளர்களுக்காக கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அதன் மூலமாக அவர்களே தங்களுக்குரிய சம்பளத்தை பங்கு பிரித்து கொள்வார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் துாய்மை பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.மக்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள்,மக்களை நேசிப்பவர்கள் தான் வயநாடு விவகாரத்தை கேள்விபட்டதும் பதைபதைப்பார்கள். வயநாட்டிற்கு இதுவரை மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. காரணம் அவர்கள் கல் மனம் படைத்தவர்கள். மக்கள் மீது அவர்களுக்கு அனுதாபம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வயநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் வயநாடு பகுதிக்கு ரெட் அலர்ட் கொடுத்தோம் என பொய் சொல்கிறார் என பினராயி விஜயன் கூறினார். இதுதான் பா.ஜ.,வினருடைய சித்தாந்தம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

nagendhiran
ஆக 02, 2024 23:19

ஒரு தாலிக்கு, ஒன்றரை லட்சம் தாலி அறுத்ததை விடவா? செல்வம்?


Ramesh Sargam
ஆக 02, 2024 22:17

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் மீட்பு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாடு சென்ற மத்திய அமைச்சர் குரியன் கூறினார். இதன் மூலம் வயநாடு பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என செல்வ பெருந்தகை கூறியது பொய் என அம்பலமாகியுள்ளது.


sankar
ஆக 02, 2024 22:09

இவர் யார் என்று அண்ணாமலை அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார் -


Ramesh Sargam
ஆக 02, 2024 20:03

அமைச்சர்கள் செல்லாவிட்டால் என்ன, மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இருபத்திநான்குமணிநேரம் செய்துகொண்டிருப்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது. ராகுல், ப்ரியங்கா மாதிரி அங்கு சென்றுவிட்டால் மட்டும் மக்கள் துயரம் போய்விடுமா? அல்லது இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை? ராணுவம் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. அவர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல், மீட்பு பணியில் செயல்படுகின்றனர். அவர்களை வாழ்த்துவதைவிட்டுவிட்டு, எப்பொழுதும்போல மத்திய அமைச்சர்களை வசைபாடுவது சரியல்ல.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி