உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!: ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!: ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை நேற்று முன்தினம்( ஆக.,21) சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இன்று இந்த உத்தரவை ஐகோர்ட் திரும்ப பெற்றது.கடந்த 2006 - 11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை, திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 2020ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.இதை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் ஜாபர் சேட் மனுத் தாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''மனுதாரருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதை ரத்து செய்யலாம்,'' என்றார். இதை ஏற்றுக்கொண்டு, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் ரத்து செய்தனர்.இந்நிலையில், இந்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், இவ்வழக்கில் சில விளக்கங்களை பெற வேண்டி உள்ளதால், 21ம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை ஆக.,28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Karunamoorthy N
ஆக 27, 2024 10:49

கரெக்ட் ட்ரை டு justifi.


Ponnusamy Chinnamani
ஆக 24, 2024 14:01

ஐயா நீதி அரசர் களே.பணிவான வணக்கம்.பெரும்பாலன அரசு அதிகாரிகள் மாண்புமிகு நீதிமன்ற உத்தரவு களை கண்டு கொள்வதில்லை.நீங்கள் ஆர்டர் போடுவதோடு சரி.ஆர்டரை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் குறிப்பாக த.வீ.வ.வா.அதிகாரிகள் எனது வழக்கு எண் ௩௭௦௧௦/௨௦௧௧.முதல் சாதாரண குடிமகனுக்கு வழங்கிய உத்தரவுகளை உண்மை யான முறையில் நடைமுறைபடுத்த வில்லை. ஆனால் நீதி அரசர் கள் வாரியம் மீது குறை கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.பொது மக்களும் போலீசும் தான் நீதி மன்றத்துக்கு பயப்படுகிறார்கள் . உயர்நீதி மன்ற உத்தரவை மதிப்பதில்லை.கண்டு கொள்வதில்லை.அரசு வழக்கறிஞர்கள் அதிகாரிகளை காப்பாற்ற பாடுபட்டு வருகின்றனர்.மாண்புமிகு உயர்நீதிமன்றத்தை ஏமாற்ற விரும்பவில்லை என்று நேரில் என்னிடம் மறுக்க முடியாது.நூறு பேருக்கு மேல் உடந்தையாக மங்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு உயர் பொறுப்பு உயர் சம்பளம் பெறுகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி நூறு பொய்யான தகவல்களை வழங்கி குற்றவாளி களை காப்பாற்றி கொண்டு வருகின்றனர்.


Anantharaman Srinivasan
ஆக 23, 2024 23:30

இரண்டு நீதிபதிகளும் ஒன்றாக நேற்று தூங்கிவிட்டனர் போலும். இன்று மீண்டும் தீர்ப்பு வாபஸ்..


Iniyan
ஆக 23, 2024 21:34

கேடு கெட்ட நீதிபதிகள் ராஜினாமா செய்ய வேண்டும்.


sundarsvpr
ஆக 23, 2024 18:45

முதலில் காவல் துறையை இரண்டாக பிரிக்கவேண்டும். ஓன்று அரசு நிரவாக்கத்தின்கீழ் மற்று ஓன்று நீதீமன்றத்தின் கீழ். குற்றங்களில் அரசின் கைவண்ணம் இருக்குமஃபட்சத்தில் அந்த வழக்குகளை நீதிமன்ற காவல் துறை விசாரிக்கும். நீதிமன்றத்தின் கீழ் உள்ள காவல்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதிக்கீடு செய்யவேண்டும்.


Dharmavaan
ஆக 23, 2024 17:25

இது ஒன்றா நீதிகளை எப்படி தண்டிப்பது.ஏன் திரும்ப பெற்றது


Palanisamy Sekar
ஆக 23, 2024 17:25

கருணாநிதி ஆட்சியில் சமயத்தில் கூட இப்படித்தான் பல வழக்குகள் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் இதுபோன்ற் சமூக ஊடகங்கள் இல்லாமல் போனதால் செய்திகள் கூட வராமல் பார்த்துக்கொள்வார் நூறு ரூபாய் நா நயஸ்தர். இப்போது தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாவதால் இதுவரை இல்லாத அளவுக்கு தாங்கள் கொடுத்த தீர்ப்பையே தாங்களே திரும்ப பெறுவது சந்தோசமாய் உள்ளதாக இருந்தாலும் சற்றே அசைந்திருந்தால் இந்நேரம் உத்தமர் ஆகியிருப்பார் இந்த திமுக ஆதரவு ஆள். என்னமோ தெரியல நம்ம நீதியரசர்கள் மத்தியில் ஒருவித குழப்பங்கள் வந்துவந்து போகிறது . உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதும், மக்கள் மத்தியில் குழப்பத்தை இந்த தீர்ப்பை போலவே ஏற்படுத்துவது நீதித்துறைக்கே களங்கத்தை உண்டாக்கிவிடுமோ என்றுதான் வருத்தபப்டுவார்கள்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 18:54

செக் ரிட்டர்ன் வழக்குகளையே சரியாக விசாரித்து தீர்ப்பு கூற சங்கடப்பட்டு ஒரு ஜூனியர் கிளார்க் போல் குனிந்த தலை நிமிராமல் காலை பத்து மணி முதல் மதியம் சாப்பாடு நேரம் வரை எழுதிக்கொண்டே இருக்கும் மாண்புமிகு நீதியரசர்கள் வாழும் நாடு. பின்னர் காலம் கடந்து வழக்கு தொடுத்தவர் மனதளவில் சோர்வடைந்த பின் வழக்கை லோக் அதாலத் துக்கு மாற்றிவிடும் நீதி மன்றங்கள் நிறைந்த நாடு தான் நம் நாடு.


மோகனசுந்தரம்
ஆக 23, 2024 17:07

இது அதற்கு உண்டான பதில் இல்லையே. எல்லா இடங்களிலும் கருப்பு ஆடுகள் உண்டு.


Barakat Ali
ஆக 23, 2024 16:25

திமுக கனிமொழியின் தலைமைக்கு கீழே வந்தால் மோடி அரசு போல திமுகவும் அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சி அமைக்கும் ......


vijai
ஆக 23, 2024 19:15

கேவலமா இருக்கும்


Ganesun Iyer
ஆக 23, 2024 19:15

மோடிய குறை சொல்ல அறிவாலத்திலேயே கைவைக்க வேண்டியிருக்கு.. ₹200க்கு எப்படி எல்லாம் புது டெக்னிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு...ம்..


தமிழ்வேள்
ஆக 23, 2024 20:50

தென் தமிழகத்தை தனி மாநிலமாக பிரித்து அங்கு திமுகவின் தலைவியாக கனியக்காவை நியமித்தால், இரண்டு மாநிலங்களில் திமுக இருக்கும்..சின்ன வருக்கும் போட்டி குறையும்.. எப்பூடி?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை