உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உழைக்க தெரியாத தமிழக முதல்வர்; ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி; அண்ணாமலை

உழைக்க தெரியாத தமிழக முதல்வர்; ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : ''உழைக்கத் தெரியாத முதல்வர் தேர்தல் தோல்விக்காக இப்போதே காரணம் தேடுகிறார்; பிரதமர் மோடியோ 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்கிறார். மக்களை தேடி வீதி வீதியா அவர் வருவது தவறா?'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திருப்பூரில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர், துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார். வீட்டுக்கு வெளியே இருக்கும் பிரதமர், நாட்டு மக்களை சந்திக்கிறார். முதல்வர் வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தி.மு.க.,வினரும், முதல்வரை நகர்வலம் அழைத்து வரலாம்.பிரதமர் மோடி, 24 மணி நேரமும், வீதிக்கு வந்து மக்களை சந்திக்கிறார்; கடுமையாக உழைக்கிறார். உழைக்க தெரியாத முதல்வர், தேர்தல் தோல்விக்காக இப்போதே காரணம் தேடுகிறார்; பிரதமர் வீதிக்கு வரும் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.தி.மு.க.,வுக்கு வெறிபிடித்து சுற்றிக்கொண்டிருக்கிறது. மதம் பிடித்த யானை, தன்னிலையை மறந்து சுற்றுவது போல, பண வெறி பிடித்து தி.மு.க., சுற்றிக்கொண்டிருக்கிறது. பணவெறி, அரசியல்வெறி, பதவி வெறி பிடித்துள்ளதால், தி.மு.க.,வுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. தமிழகத்தில், தவறு செய்த யாரும் தப்பி செல்ல முடியாது; தவறு செய்தவர் சட்டத்தின் கரத்துக்கு அகப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் கைதாவார் ஆ.ராஜா

அண்ணாமலை கூறுகையில், ''தி.மு.க., - எம்.பி., ராஜா மீண்டும் 'சீட்' கிடைக்க வேண்டும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் காதில் விழ வேண்டும் என்பதற்காக, மிக சத்தமாக பேசுகிறார். சி.பி.ஐ., தினமும் விசாரித்து வருகிறது; விசாரணை விரைவாக நடப்பதால், 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில், ஏப்., முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், ராஜா கைதாவார். இதை, ஒரு யூகத்தில் தான் நான் கூறுகிறேன். தீர்ப்பு வரும் போது, இதை என்னுடன் முடிச்சு போடக்கூடாது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Arachi
மார் 23, 2024 23:10

உங்களை சுத்தம் செய்யும் அறிக்கை தான் திமுக தேர்தல் அறிக்கை


Indian
மார் 23, 2024 08:19

useless statement


Ramesh Sargam
மார் 19, 2024 03:13

அந்த கிளாம்பாக்கம் பஸ் வளாகம் விஷயம் என்னவாச்சு? அந்த போதைப்பொருட்கள் கடத்தினவன் கூட எப்படி நட்பு ஏற்பட்டது? முரசொலி மூல பாத்திரம் எங்கே? நீட் தேர்வு ரத்து என்னவாச்சு? மதுவை ஒழித்துவிட்டீர்களா முதல்வரே? ஆமாம், சில நாட்களாக அந்த கனிமொழி மற்றும் அந்த உதய நிதி எங்கே கண்ணில் படவில்லையே??


ramesh
மார் 18, 2024 21:43

உண்மைதான் அதானி க்கும் அம்பானிக்கு ஓய்வில்லாமல் உழைக்கும் உங்கள் தலைவர் என்பதே சரி


Pandi Muni
மார் 18, 2024 16:23

எதுக்கு உழைக்கணும். Drug Mafia வருமானமே போதுமே.


வெகுளி
மார் 18, 2024 14:54

போட்டோ ஷூட்.... அட்டை கத்தியால் அவ்வளவுதான் முடியும்...


Sridhar
மார் 18, 2024 14:13

என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, அவுரு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு அவுங்க குடும்பத்துக்கு கட்டுமரம் கூட நினச்சுபாக்கமுடியாத வழிகளில் சம்பாதிச்சு கொடுத்துக்கொண்டு இருக்குறாரு சும்மா நீங்க BGR ஊழல்னு சொல்லிட்டிருந்தப்போ, அவங்க மனசுக்குள்ள எப்படி சிரிச்சிகிட்டு இருந்திருப்பாங்க? பாவம் அப்பாவி பசங்களுக்கு வெறும் சாராயம் வரத்தான் தெரிஞ்சிருக்கு, மெயினானா மணல் கஞ்சா பத்தியெல்லாம் இவனுகளுக்கு தெரியல்னு உங்களை பத்தி எவ்வளவு இளக்காரமா நினச்சுருப்பாங்க? இப்போவும் அவுரு ஏத நினச்சு சிரிச்சிக்கிட்டிருக்காரோன்னு எங்களுக்கு சந்தேகமாகவே இருக்கு.


angbu ganesh
மார் 18, 2024 15:02

அம்மா மேக்கப்


angbu ganesh
மார் 18, 2024 15:05

ஆமாம் உடற்பயிற்சின்ற பேருல ஒரு மணி நேரம் ஜோக்கர் வேலை பண்ணி மத்தவங்கள சிரிக்க வைக்க எவ்ளோ முயற்சி பன்றார் மேக்கப் போடவே இரண்டு மணி நேரம் செலவு பன்றார், ஒவ்வொரு இடத்துக்கும் நடக்க ஒரு மணி நேரம் செலவு பன்றார் எழுத்து கூட்டி துண்டு சீட்டு படிக்க தினமும் நான்கு மணி நேரம் செலவு பன்றார் அவருக்கு 24 மணி நேரம் பத்தலயம்


J.Isaac
மார் 18, 2024 13:48

ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் உ.பி அமைதி மாநிலமா? ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் தமிழ் நாடு அமைதி மாநிலமா?


Ramanujadasan
மார் 18, 2024 14:47

அப்படி செய்து விட்டனர் உங்கள் கூட்டணி களவாணிகளான சமஜ்வாதியும் , காங்கிரஸ் ம் என்ன செய்ய ? தமிழகமும் அந்த மாநிலத்தை போக ஆகாமல் இருக்கவே தீய முகவை விரட்ட வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்


ramesh
மார் 18, 2024 21:45

முதலில் டெபாசிட் வாங்க முடியுமா என்று பாருங்கள் .பிறகு திமுக வை கனவில் விரட்டி கொள்ளுங்கள்


raja
மார் 18, 2024 13:44

அஞ்சு வயசிலேயே அண்ணாவுக்கு வாங்க வேண்டிய பக்கொடா காசுல அஞ்சு பைசாவை ஆட்டையை பொட்டவன் அவன் .. உழைப்பான் என்கிற...


K.Muthuraj
மார் 18, 2024 12:44

செய்திக்கு சிறிது நேரம் சிரித்தாலும் உண்மையும் அதுவாகத்தான் தோன்றுகின்றது. மோடியின் தினசரி நிகழ்ச்சி நிரல்கள் அவ்வாறு தான் இருக்கின்றன.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை