| ADDED : டிச 30, 2025 06:38 AM
சென்னை: 'தமிழகத்தில் எங்கு திரும்பினாலும், போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அது பற்றி கவலைப்படாமல், முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டம், துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் என, தமிழகத்தில் எங்கு திரும்பினாலும், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட, அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர். தி.மு.க.,வை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.