உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வர் இன்று கோவை பயணம்

 முதல்வர் இன்று கோவை பயணம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து, தொழில் துறை சார்பில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் பங்கேற்கிறார். கோவையில் இரவு தங்கும் முதல்வர், நாளை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், பொல்லான் அரங்கை திறந்து வைக்கிறார். பின், அரசு விழாவில், 605 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார்; புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில், 1.84 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். சித்தோடு ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். நாளை இரவு, விமானம் வாயிலாக கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 25, 2025 10:35

கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை இல்லை என ஏன் அறிவித்தது மத்திய அரசு என்று கேட்டு மக்களை உசுப்பேத்த போயிருக்கிறார் முதல்வர்? மத்திய அரசு கேட்ட விவரங்களை கொடுக்காது இவர்கள் தவறு. அதை அப்படியே மறைத்து மத்திய அரசு மீது பழி போட்டு அங்குள்ள மக்களை குழப்ப சென்றிருக்கிறார் முதல்வர்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 25, 2025 09:53

செம்மொழி பூங்காவா? நெல் மணி கிடங்கா? தமிழக மக்கள்: ஹி...ஜி எங்களுக்கு இலவச பஸ் பயணம், ஓட்டுக்கு 2000 ரூபாய் மற்றும் தடை இல்லாத சரக்கும் போதை வஸ்துக்களே போதும் எசமான் அப்படியே சினிமா படங்களுக்கு இலவச டிக்கெட் ஏற்பாடு செஞ்சி கொடுத்தா காலத்துக்கும் உங்களுக்கே ஓட்டு போட்டு மிகவும் நன்றி உள்ளவர்களா இருப்போம் எசமான்.....!!!


Ramesh Sargam
நவ 25, 2025 07:56

அந்த பூங்கா இன்னும் முழுவதும் முடியவில்லை. அதற்குள் திறப்புவிழா. தானும் ஏதோ சாதித்துவிட்டேன் என்று காட்டிக்கொள்ள. மக்களே ஏமாறவேண்டாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை