| ADDED : நவ 23, 2025 01:01 AM
சென்னை: சென்னையில் நேற்று நடந்த மின் வாரிய தி.மு.க., தொழிற்சங்க செயற்குழுக் கூட்டத்தில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க.,வின் தொழிற்ச ங்கமான மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 82வது மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் சசிகுமார், பொதுச்செயலர் மணிமாறன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட, 150 பேர் பங்கேற்றனர். இதில், 2026 சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது, உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில், பொதுக்குழு ஆலோசனை, வரவு - செலவு ஒப்புதல் ஆகிய தீர்மானங்களை நிறுத்தி வைக்குமாறு, சசிகுமார் கூறியுள்ளார். இதற்கு, கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தலைவர், பொதுச்செயலர் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளினர். மோதல் குறித்து சங்க உறுப்பினர்கள் கூறியதாவது: இரு தீர்மானங்களை நி றைவேற்றக்கூடாது என, மாநிலத் தலைவர் சசிகுமார் தெரிவித்தபோது கீழே இருந்த ஒருவர், தலைவரை நோக்கிச் சென்று ஏன் என கேட்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 'சங்க நிதியில் முறை கேடு நடந்துள்ளது; நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து, வரவு - செலவுக்கு ஒப்புதல் பெறக்கூடாது' என, தலை வர் தரப்பினர் கூறினர். 'பொதுக்குழுக் கூட்டம் நடந்தால், தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பது தலைவர் தரப்பினர் எண்ணம்' என, பொதுச்செயலர் தரப்பினர் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.