உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கை, சந்தேக மரணம் என்ற ரீதியில் விசாரித்து வருவதாகவும், கொலையா தற்கொலையா என தற்போது முடிவு செய்யவில்லை, விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும் என தென்மண்டல ஐ.ஜி கண்ணன் கூறியுள்ளார்.நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15 * 50 செ.மீ கடப்பா கல் கட்டப்பட்டு இருந்தது. முதுகு பகுதிகள் எரியவில்லை என இடைநிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொலையா, தற்கொலையா என எதுவும் சொல்லவில்லை. ஜெயக்குமார் கொலை என இதுவரை முடிவு செய்யவில்லை. அவரது உடல் அருகே டார்ச்லைட் கண்டெடுத்துள்ளோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mt8s2omi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சந்தேக மரணம் என்ற ரீதியில் தான் விசாரித்து வருகிறோம்; விரைவில் முடிவு கிடைக்கும். ஜெயக்குமாரின் கடிதம் குறித்து அறிவியல்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் கடிதத்தில் இருந்த கையெழுத்து அவருடையதுதான் என உறவினர்கள் கூறியுள்ளனர். அதில் மிகைப்படுத்தப்பட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவாக 10 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

துரை
மே 14, 2024 10:36

கேஸ் மொத்தமாக ஊத்தி மூடப்படும் என்பது தெள்ளத் தெளுவு.


N S Sankaran
மே 13, 2024 22:23

ஜெயக்குமார் கால்களை இரும்பு கம்பியால் கட்டிக்கொண்டு, வாயில் இரும்பு scrubber ஐ கவ்விக்கொண்டு நான்கைந்து மணி நேரம் தன்னைத்தானே அடித்து உதைத்துக்கொண்டு காலிலிருந்து இடுப்பு வரை தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இதற்கு அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?


RAJ
மே 13, 2024 22:20

இன்னுமா சார் கிடைக்கல? அப்பொ இந்த் லெட்டர் எல்லாம் சும்மாங்காட்டியுமா சார் அவருடைய அட்மின் எழுதி இருப்பாரோ கொஞ்சம் குழப்பமா கீது


sankaranarayanan
மே 13, 2024 21:15

சாதிக் பாஷா கொலை வழக்கு - இராமஜெயம் கொலை வழக்கு - சாத்தான்குளம் கொலை வழக்கு - கள்ளக்குறிச்சி பள்ளி மணவி தற்கொலை - மைக்கேல்பட்டி மாணவி கொலைவழக்கு - திருச்சி பிஷப் ஹிப்பர் பள்ளி விவகாரம் - இப்படி பல பல பள்ளிகளில் மாணவர்கள் கொலை வழக்கில் எந்த விதமான முடிவும் மக்களுக்கு வந்ததாக தெரியவில்லை ஆண்டவா நீ எங்கேடா இருக்கிறாய்


Duruvesan
மே 13, 2024 20:29

ஆக ஆக அமைதி பூங்கா திராவிட நாட்டில் சங்கிகள் சதி


sridhar
மே 13, 2024 19:23

விரைவில் அரசிடமிருந்து தெளிவான சிக்னல் கிடைக்கும்


Krishnamoorthy Perumal
மே 13, 2024 19:15

எப்படி ராமஜெயம் கொலை வழக்கு மாதிரியா?


ஆரூர் ரங்
மே 13, 2024 18:58

உதயக்குமார், தாகி, ராமஜயம் முதல் ஜெயகுமார் வரை தெளிவான முடிவு? அதெல்லாம் மேலிடத்தின் முடிவு.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி