உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.பி.ஐ., போலி செயலி க்ளிக் செய்தால் பணம் காலி

எஸ்.பி.ஐ., போலி செயலி க்ளிக் செய்தால் பணம் காலி

சென்னை:பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த சில மாதங்களாக, 'எஸ்.பி.ஐ., ரிவார்டு பாயின்ட்ஸ்' உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், 999 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், 'வாட்ஸாப்'பில் தகவல் பரவுகிறது. இந்த தொகையை பெற, கீழே உள்ள ஏ.பி.கே., செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், மோசடி கும்பல் தகவல் அனுப்புகிறது. உண்மை என்று நம்பி பலர், 'க்ளிக்' செய்து பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அப்படி செய்யும் போது, நம்முடைய அனைத்து தரவுகளும் மோசடி கும்பலுக்கு சென்று விடும். வங்கி கணக்கில் உள்ள பணமும் எளிதாக திருடப்படும். இதுபோன்றவற்றை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை