உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  2026 ஜூனுக்குள் கோவை,மதுரை மெட்ரோ திட்டம்: நாகேந்திரன் திட்டவட்டம்

 2026 ஜூனுக்குள் கோவை,மதுரை மெட்ரோ திட்டம்: நாகேந்திரன் திட்டவட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி

: தி.மு.க., அரசு, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையென மக்களிடம் நம்ப வைக்க முயல்கிறது. தமிழக மக்களுக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செயல்படுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. மத்திய அரசு திருத்தி அனுப்புமாறு கூறியுள்ளது. தி.மு.க., அரசு, திட்ட அறிக்கையை சரியாக அளிக்காததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் வரக்கூடாது என்பதற்காகவே, தி.மு.க., அரசு அறிக்கையை தவறாக உருவாக்கி அனுப்பியுள்ளது. கோவையில் ரயில் நிலையம் - பஸ் நிலையம் இடையே குறைந்தபட்சம் 22 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். இது கூட பரிசீலிக்கப்படாமல் தவறான அறிக்கை அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வந்த வேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கருப்பு கொடி காட்டுவது தி.மு.க., அரசின் அர்த்தமற்ற நடத்தை. திருத்தப் பட்ட மெட்ரோ ரயில் அறிக்கையை தி.மு.க., அரசு அனுப்ப வேண்டும். அனுப்பாவிடில், வரும் 2026 ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பா.ஜ., செயல்படுத்தி காட்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பலாத்கார குற்றம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது; பெண்கள் மீதான வன்முறை 60 சதவீதம் உயர்ந்துள்ளது; போதைப் பொருள் பரவல் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ