உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு

திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி, திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இந்த விவகாரம், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இத்தகைய சூழ்நிலையில், திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ், 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. அந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ponssasi
நவ 22, 2025 12:33

தற்போதைய தமிழக காங்கிரஸ் ஒரு சிறு சாதிக்கட்சி போல தோற்றமளிக்கிறது, இந்த நிலை மாறவேண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வரமுடிகிறது.


KRISHNAN R
நவ 22, 2025 11:50

வேற வழி


Yaro Oruvan
நவ 22, 2025 11:48

குடுக்குற 4 சீட்ட வாங்குறதுக்கு எதுக்கு குழு... ஒத்த ஆள் போயி வாங்கீட்டு வரவேண்டியயதுதானே


Sun
நவ 22, 2025 11:43

இதில் தமிழகத்தின் சார்பில் செல்வபெருந்தகை மட்டுமே தெரிந்த முகமாக உள்ளது. தமிழ்நாட்டில் செல்வப் பெருந்தகைக்கு மட்டும்தான் தி.மு.க வுடன் பேசத் தெரியுமா? மற்ற தமிழக தலைவர்களுக்கு பேசவே தெரியாதா?அப்புறம் என்ன? அப்ப அண்ணன் சொல்ற தொகுதி எண்ணிக்கைதான், அண்ணன் சொல்ற தொகுதிதான், அண்ணன் சொல்ற வேட்பாளர்கள்தான். அண்ணே சும்மா கில்லின்னே நீங்க !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை