| ADDED : மார் 08, 2024 02:09 AM
சிவகங்கை:''வேட்பாளர் முக்கியமில்லை... சின்னம் கட்சி, கூட்டணி தான் முக்கியம். வேட்பாளர் என்பவர் வெறும் மேனேஜர் தான்'' என காங்., கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது: சிவகங்கையில் கடந்த முறை வாங்கிய ஓட்டுக்களை விட ஒரு லட்சம் ஓட்டுக்கள் அதிகமாகவே வாங்குவோம். எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. மன்னார்குடி தினகரன் நிற்கப் போவதாக சொல்கிறார்கள். அவர் வந்தால் செட்டிநாடு விருந்தோம்பல் கொடுத்து திரும்ப அனுப்பி வைப்போம். இங்கே வேட்பாளர் முக்கியமில்லை... சின்னம் கட்சி, கூட்டணி தான் முக்கியம். வேட்பாளர் என்பவர் வெறும் மேனேஜர் தான். எங்கள் கூட்டணிக்கு இந்த லோக்சபா தொகுதியில் 5 எம்.எல்.ஏ., 3 அமைச்சர் என பலமாக உள்ளோம். எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.சிவகங்கையில் தேர்தல் பத்திர பிரச்னையில் ஸ்டேட் வங்கியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., கூறியதாவது: 90 சதவீதம் பா.ஜ.விற்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ., டிஜிட்டல் இந்தியா எனக் கூறும் நிலையில் வந்த நிதி குறித்த தகவல்களை தர ஸ்டேட் வங்கி நிர்வாகம் ஏன் 4 மாத கால அவகாசம் கோர வேண்டும். காங்., கட்சிக்கு வந்த நிதி நன்கொடை. ஆளுங் கட்சிக்கு வந்த நிதி லஞ்சம். புதுச்சேரி சிறுமி பலாத்கார கொலை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிப்பது மட்டுமில்லாமல் போதைப்பொருளை தடுக்க தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.