உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பா? சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை

அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பா? சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பு உள்ளதா என, யூடியூபர் சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கரூரை சேர்ந்த, பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன் என்பவ-ரிடம், பண மோசடி செய்ததாக, கைது செய்யப்பட்ட விக்னேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கரூர் டவுன் போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்-தனர். சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்-பட்டுள்ள சவுக்கு சங்கரை கடந்த, 8 ல் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் கரூர் நீதி மன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்ப்படுத்தி, நான்கு நாள் காவலில் விசாரிக்க, கரூர் டவுன் போலீசார் அழைத்து சென்றனர். தற்போது, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் யூ டியூபர் சவுக்கு சங்-கரிடம், கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் தொடர்பு உள்-ளதா என, போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியா-னது.இது பற்றி போலீசார் கூறியதாவது: கடந்தாண்டு மே மாதம், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதர-வாளர்களின் வீடுகளில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுகுறித்து, சவுக்கு சங்கர் யூ டியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மனைவி நிர்மலா பெயரில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ராம் நகரில் கட்டி வரும், புதிய வீட்டின் முன், சவுக்கு சங்கர் நின்று செல்பி எடுத்து, சமூக வலை தளங்-களில் பதிவிட்டு இருந்தார். அந்த புதிய வீடு வைரல் ஆனது.இதுபோன்ற சம்பவங்களுக்கு, கரூரை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வா-கிகள் யாராவது உதவி செய்தார்களா எனவும், தி.மு.க.,வினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பேட்டிகள், விக்னேஷின் பண மோசடி வழக்கு குறித்தும் விசாரித்தனர். விசாரணை தொடரும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kuppan
ஜூலை 11, 2024 12:41

அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பா? அ.தி.மு.க என்ன தீவிரவாத இயக்கமா ? இதற்கு முன் சவுக்கு தி மு க வுடன் தொடர்பில் இருந்தார் அப்போ அவர்களையும் விசாரிப்பார்களா ?காவல் துறை என்ன சாதிக்க நினைக்கிறது


K.Muthuraj
ஜூலை 11, 2024 11:05

போகிற போக்கில், ஏலியனுக்கு இவரோட தொடர்பு என்றெல்லாம் கேஸ் எழுதுவார்கள்.


Velan
ஜூலை 11, 2024 06:32

அவர் வெளிய வரட்டும் அபபுறம் இருக்கு. விடியலுக்கு


raja
ஜூலை 11, 2024 06:25

தவறு செய்தவர்களை சாட்சியங்களுடன் வெளிக்கொண்டு வந்தவர்கள் குண்டாசில் கைது விசாரணை தவறு செய்தவர்கள் தலைமறைவு அவர்களை பிடிக்க துப்பில்லாத ஏவல் துறை அதற்கு ஒரு மந்திரி...இதுதாண்டா திராவிட மாடல்..


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 11, 2024 09:44

திராவிடியா மாடலன்னு சொல்லுங்கோ.


Kasimani Baskaran
ஜூலை 11, 2024 05:32

இதைப்பார்த்தாவது 25 கோடி வாங்கி திராவிட சேவகம் செய்யும் கம்மிகளுக்கு புத்தி வரவேண்டும். எவ்வளவுதான் தீம்க்காவுக்கு விசுவாசமாக இருந்தாலும் ஒரு நாள் சாதாரண உபிஸை வைத்து நாலு கொடுப்பார்கள்..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி