உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி

சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி

சென்னை:'சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில், அரசு முறையாக செயல்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.தமிழகம் முழுதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் நிலை குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை, 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில், அரசு முறையாக செயல்படவில்லை; கடமைக்காக, வழக்கு நடத்துவது போல் உள்ளது. ஒரு கிராமம் அல்லது பஞ்சாயத்தில் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்ற, ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை. சமதள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதில் என்ன பிரச்னை? மரங்களை அகற்றும் பணியை, ஏலத்தில் விடலாமே' என, கேள்விகள் எழுப்பினர்.இன்றும் விசாரணை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை