உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசு யாருக்கு இல்லை விபரம் கேட்டு ஐகோர்ட் உத்தரவு

பொங்கல் பரிசு யாருக்கு இல்லை விபரம் கேட்டு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை யார் யாருக்கு வழங்கப்படவில்லை என்ற விபரங்களை அளிக்கும்படி, வழக்கு தொடர்ந்தவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், அரிசி, கரும்பு என பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தனக்கு கிடைக்கவில்லை என, ராமநாதபுரம் மாவட்டம், முதுநால் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பொங்கல் பரிசை பெற, ஜனவரி 12ம் தேதி மாலை வரும்படி, என்னிடம் கூறப்பட்டது. அதன்படி, முதுநால் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றேன். கடை பூட்டியிருந்தது. உடனே, கிராம உதவியாளரிடம் தெரிவித்தேன். ரேஷன் கடைக்கு வந்தவர்கள், கடை பூட்டியிருந்ததால் விரக்தியுடன் திரும்பினர். இதுகுறித்து, கலெக்டருக்கு மனு அனுப்பினேன். முறையாக பொங்கல் பரிசு வினியோகிக்காததால், அரசுக்கு 140 கோடி ரூபாயை, ரேஷன் கடைகளின் பொறுப்பாளர்கள் திருப்பி கொடுத்துள்ளனர். வங்கி வாயிலாக அனுப்பியிருந்தால், தகுதியானவர்கள் விடுபட்டிருக்காது. எனவே, வங்கி பரிவர்த்தனை வாயிலாக, 1,000 ரூபாய் பொங்கல் பரிசை, தகுதியுள்ள விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. தமிழகம் முழுதும் லட்சக்கணக்கான பேர், பரிசுத் தொகையை பெறவில்லை என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, யார் யாருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை என்ற விபரங்களை, மனுதாரர் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 12க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை