உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடன் விவகாரத்தில் தமிழக அரசு மீது விமர்சனம்; பிரவீன் சக்கரவர்த்திக்கு வலுக்கிறது கண்டனம்

கடன் விவகாரத்தில் தமிழக அரசு மீது விமர்சனம்; பிரவீன் சக்கரவர்த்திக்கு வலுக்கிறது கண்டனம்

-- நமது நிருபர் - தமிழகத்தின் கடன், உத்தர பிரதேசத்தை விட அதிகரித்திருப்பதாக கூறி தி.மு.க.,வை விமர்சித்த காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவரும், ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். த.வெ.க., தலைவர் விஜயை கடந்த 5ம் தேதி சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி, '2010ல் உ.பி.,யின் கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. 'ஆனால், இப்போது கடன் வாங்குவதில் உ.பி.,யை தமிழகம் விஞ்சி விட்டது' எனக்கூறி, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு, தி.மு.க., காங்கிரஸ், வி.சி., கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரசை பொறுத்தவரை ராகுல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் சொல்வது தான் அதிகாரப்பூர்வ கருத்து. ராகுல் மற்றும் காங்கிரசின் நற்பெயரை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்த தனிநபர்களின் கனவு பலிக்காது; அது பகல் கனவாகவே முடியும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி எக்கு கோட்டை போல பலமாக உள்ளது. இதை, தனிநபர்கள் யாரும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் பா.ஜ.,வை காலுான்ற வைக்க சில சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. அவர்கள் காங்கிரசுக்குள் இருந்து கொண்டு இந்த வேலையை செய்தாலும் அனுமதிக்க மாட்டோம். உ.பி.,யில், 'புல்டோசர்' ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சியோடு தமிழகத்தை ஒப்பிடுவது அபத்தமானது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். அவரது கருத்திற்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை. தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா: தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட யாருடனும் மோதலில் ஈடுபடுவதை, 'இண்டி' கூட்டணியினர் தவிர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பவர்களுடன் போரிட வேண்டிய நாம், தேவையற்ற கவனச் சிதறல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல, கூட்டணியினர் ஒவ்வொருவரும் நேரத்தை செலவிடுங்கள். திசை திருப்பும் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வி.சி., துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ்: 'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று, அறச்சீற்றத்துடன் ஈ.வெ.ராமசாமி வெளியேறி, தனி இயக்கம் துவங்கி, 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், காங்கிரசுக்குள் அந்த சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கின்றனர் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ஈ.வெ.ராமசாமி வழியில் ராகுல் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர், ஆர்.எஸ்.எஸ்., வழியில் பயணிப்பது தான் அக்கட்சி சந்திக்கும் பெரும் சிக்கல். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல

தமிழகம் பெற்றிருக்கும் கடன்கள், கல்வி, மருத்துவமனை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நீண்டகால முதலீடுகள் என பல்வேறு இனங்களுக்காக பயன்படுத்தப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தியுள்ளன. வரி வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் தமிழகத்துக்கு, நிதி பங்கீட்டில் அதற்கேற்ற அளவை மத்திய அரசு அளிப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளே கவர்னர் வாயிலாக முடக்கப்படுகின்றன. இவை எதையுமே கவனத்தில் கொள்ளாமல், மனம் போன போக்கில் காங்கிரசாரே விமர்சிப்பது சரியல்ல. வளர்ச்சி முடிவுகள், ஒருவருக்கான சராசரி குறியீடுகள், வரி பங்களிப்பு- பங்கீடு விகிதம், நிர்வாகத்தின் தரம் ஆகியற்றை வைத்துப் பார்த்தால், தமிழகம் முன்னணியில் இருப்பதை உணரலாம். இதை கருத்தில் கொள்ளாமல், பா.ஜ.,விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல. - ஜோதிமணி, எம்.பி., - காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Saai Sundharamurthy AVK
டிச 30, 2025 11:54

திமுக ஒரு நாசகார கட்சி. கடன் வாங்கி வாங்கி தமிழர்களை தலைகுனிய வைத்து விட்டது. ஜோதிமணிக்கு எம்.பி சீட்டு தான் முக்கியம். அவருக்கு தமிழ்நாடு எக்கேடு கெட்டுப்போனால் என்ன ?? காங்கிரஸில் இருக்கும் திமுகவின் ஸ்லீப்பேர் செல் தான் இந்த ஜோதிமணியும், செல்வப் பெருந்தகையும்......!!!!


mganesan
டிச 30, 2025 11:36

திமுக ஒன்றும் சொல்லவில்லை...............


யாரோ
டிச 30, 2025 11:07

venugopal, நீங்கள் கூறுவது - அவன் அதை உண்கிறான் அதனால் நானும் அதையே உண்டால் என்ன தப்பு என்கிறீர்கள். ஏன் உங்களுக்குத்தான் பகுத்தறிவு பலமாக உள்ளதே. அவன் உண்பது விஷம் என தெரியாதா? நீங்கள் அறிவுடன் அதை உண்ணாமல் தவிர்க்கலாமே. உங்கள் பதிவு ஒரு escapism ஆகத்தான் தெரிகிறது. மக்களுக்கு இலவசம் தர விதவிதமாக போடும் பிளானில் மாநிலத்தின் கடன் சுமையை எப்படி குறைக்கலாம் என சிறிதளவாவது சிந்திக்கச் சொல்லுங்கள். யார் வீட்டுக் காசை யார் எடுத்து யாருக்கு இலவசமாக தருவது? இதில் படித்த மாநிலம் என பீத்த பெருமை வேறு


manian
டிச 30, 2025 10:31

no body likes the truth


duruvasar
டிச 30, 2025 10:18

கரூர் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு கூட்டத்தில் காங்கிரசுக்கு திமுக கொடுத்த " உரிய மரியாதை "யை அனுபவித்த ஜோதிமணி அக்கா இப்படி ஸ்பெஸல் முட்டு கொடுப்பது ஏன் என புரியவில்லை.


Venugopal S
டிச 30, 2025 09:55

இவர்கள் எல்லாம் என்ன பெரிய தேசியக் கட்சி தலைவர்கள் என்று புரியவில்லை. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எல்லா மாநிலங்களும் அவரவர் மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில் அதாவது ஜி எஸ் டி பி யில் இருபத்தெட்டு சதவீதம் வரை கடன் வாங்கலாம் என்று நிர்ணயம் செய்து உள்ளனர்.தமிழகத்தின் கடன் அளவு பெரிதாக தெரிவதற்கு காரணம் அதன் ஜி எஸ் டி பி அதிகம்.மேலும் தமிழகம் நிர்ணயிக்கப்பட்ட இருபத்தெட்டு சதவீத அளவுக்குள் தான் கடன் வாங்குகிறது. மற்ற சில மாநிலங்களான ஆந்திரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, பீகார் அந்த நிர்ணயிக்கப்பட்ட இருபத்தெட்டு சதவீத அளவைத் தாண்டி கடன் வாங்கி உள்ளன. அடிப்படை பொருளாதார அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்!


theruvasagan
டிச 30, 2025 11:07

கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் அந்த நிதியை வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் இலவசங்களை வாரிக் கொடுப்பதற்கு பயன்படுத்துவதுதான் ஆட்சேபிக்கத் தக்கது. கடந்த நாலரை வருடங்களில் தமிழக மின் உற்பத்தியை ஒரு மெகாவாட் கூட அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். மாநிலம் முழுவதும் அடிப்படை வசதிகளை பெருக்காமல் ஊதாரிச் செலவுக்கே வருமானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது மிக கசப்பான உண்மை.


கண்ணன்,மேலூர்
டிச 30, 2025 11:19

இந்தா வந்துட்டாருல்ல மொரட்டு முட்டு அறிவாலய பொருளாதாரப் புலி வேணு...


ஆரூர் ரங்
டிச 30, 2025 11:27

நிஜமாகவே முன்னேறிய மாநிலமென்றால் கடன் வாங்கி உரிமைத் தொகை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏன்? மக்கள் எல்லோரும் சொந்த காலில் நிற்கிறார்கள் என்றால்தான் நிஜ முன்னேற்றம். ஆனால் வாங்கும் கடனில் பாதி சன் இன் லா வீட்டிற்கல்லவா செல்கிறது? முதலாண்டிலேயே 30000 கோடின்னு PTR கூறியது பொய்யா?


பேசும் தமிழன்
டிச 30, 2025 07:51

கடனை வாங்கி உதவித்தொகை கொடுத்தோம் என்று கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாது..... அது நம் கையை கொண்டு நம் கண்ணை குத்துவது போல !!!


பேசும் தமிழன்
டிச 30, 2025 07:47

இரண்டு மடங்கு கடன் வாங்கியது உண்மையா இல்லையா.... அதை சொல்லாமல்... உண்மையை சொன்ன ஆள் மீது பாய்ந்து பிராண்டுவது ஏன்...... உண்மையை பேசினால் கான் கிராஸ் கட்சி ஆட்களுக்கு பிடிக்காது போல் தெரிகிறது.... அது உண்மையும் கூட.... அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பொய்.... பித்தலாட்டம்.


SUBBU,MADURAI
டிச 30, 2025 05:17

மத்திய மேலிட காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி திமுக ஆட்சியில் உத்திரப் பிரதேசத்தை விட அதிகமாக கடன் வாங்கியுள்ளார்கள் என உண்மையைத்தான் கூறியுள்ளார். இது திமுகவிற்கு பிடிக்கவில்லை. அவர்கள் ஒரு மிரட்டலை போட்டவுடன் பயந்து பம்மிப் போய் பழியை தூக்கி பாஜக மேல் போடுகிறார்கள். தமிழக காங்கிரஸில் உள்ள திமுக அடிமைகளுக்கு இதே வேலையாக போய்விட்டது. என்றைக்கு தமிழகத்தில் பாஜக தனியாக நின்று 11% சதவீதம் ஓட்டு வாங்கியதோ அப்போதே தமிழகத்தில் பாஜக வலுவாக கால் ஊன்றி விட்டது என்பது இவர்களுக்கு தெரிந்தாலும் அதை மறைத்து தமிழக மக்களை ஏமாற்ற நாடகம் போடுகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸூம் திமுகவும் அடித்துக் கொள்ளும் இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாத பாஜக எங்கிருந்து வந்தது என்பதை திமுகவின் அடிமையான செல்வப் பெருந்தகை விளக்குவாரா? இதன் மூலம் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது அது இவர்கள் கூறும் திமுக காங்கிரஸ் கூட்டணியின் எக்கு கோட்டை கலகலத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை..


Gajageswari
டிச 30, 2025 05:12

உண்மை என்றுமே கசக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை