உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேற்றை வீசிய பெண்ணுக்கு முன்ஜாமின் மறுப்பு

சேற்றை வீசிய பெண்ணுக்கு முன்ஜாமின் மறுப்பு

சென்னை:'பெஞ்சல்' புயல் தாக்கத்தால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை எனக்கூறி, விழுப்புரம் - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சமரசப் பேச்சு நடத்த அமைச்சர் பொன்முடி சென்றபோது, அவர் மீது சிலர் சேற்றை வீசினர்.இச்சம்பவம் தொடர்பாக, திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை