உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமியுடன் சந்திப்பா

பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமியுடன் சந்திப்பா

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.லோக்சபா தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் தவித்து வரும் பா.ம.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுடன் திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறது. இரட்டை இலக்கில் லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி, மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.,விடம் பா.ம.க., வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக பா.ம.க., எந்தப் பேச்சையும் இதுவரை நடத்தவில்லை.இந்நிலையில் நேற்று பிற்பகலில் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரின் கார்கள், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டு முன்பு நின்றன. இதனால் அவர்கள் மூவரும் பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் பரவியது. அதிலும் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே, ராமதாசின் துாதர்களாக அவர்கள் மூவரும் வந்திருக்கலாம் என கூறப்பட்டது.

அமைச்சர் வீட்டுக்குத்தான் போனோம்

பா.ம.க., எம்.எல்.ஏ., சிவகுமார் கூறுகையில், எங்கள் தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் தொடர்பான கோரிக்கைகள் வைப்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்திக்கவே பசுமைவழிச் சாலையில் உள்ள அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். கீதா ஜீவன் வீட் டிற்கு அருகில்தான் பழனிசாமி வீடு இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அங்கு கார்களை நிறுத்தி விட்டு அமைச்சர் வீட்டிற்குச் சென்றோம். பழனிசாமி வீடு அருகே பா.ம.க., கொடி கட்டப்பட்ட எங்கள் கார்கள் நின்றதால் கூட்டணி பேச்சு என செய்தி பரப்பி விட்டார்கள். நாங்கள் பழனிசாமியை சந்திக்கவில்லை. அது தவறான செய்தி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

J.V. Iyer
பிப் 24, 2024 07:02

பிறகு கடைசியில் திமுகவின், அதிமுக. எல்லா திருட்டு கழகங்களும் ஒன்றாக சேருவது இயற்கை.


Vijay D Ratnam
பிப் 24, 2024 00:25

கிங் ஆஃப் பல்டி பாமகவை, விடுதலை சிறுத்தைகள் இருக்கும் திமுக கூட்டணி பக்கம் தள்ளி உடுங்க எடப்பாடியாரே. அதிமுக வெற்றியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தமிழக தேர்தல் களம் சூப்பராக இருக்கிறது. ஆளும் கட்சி மீது மக்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள். திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள் வேறு வழியில்லாமல் அங்கே புழுங்கி கொண்டு இருக்கிறார்கள். திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு விழும். அண்ணாமலை மாதிரி தெருசண்டை போட வேண்டாம். சந்திரசேகர்ராவ் அரசியலை எதிர்த்து நாயா பேயா கத்தியது பாஜகதான். ஆனால் தெலுங்கானாவில் பேக்ஃபயர் ஆகி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது போலாகும். நீங்கள் களப்பணியை தீவிரமாக்குங்கள். தமிழ்நாட்டின் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சி அதிமுகதான் என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துங்கள். ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஆண்டிமுத்து ராசா அடித்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா கொள்ளையையும், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்று குவித்த மாபாதக செயலை மீண்டும் மீண்டும் எடுத்து சொல்லுங்கள். பிகாஸ் நம்ம மக்களுக்கு மறதி ஜாஸ்தி.


Anbuselvan
பிப் 23, 2024 23:14

பத்து தொகுதிகள் மற்றும் கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு ராஜ்ய சபா தொகுதி. இப்படி இருக்குமோ டீல்


kulandai kannan
பிப் 23, 2024 20:33

பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது, பாஜகவுக்கு நல்லது.


திகழ்ஓவியன்
பிப் 23, 2024 21:10

எஸ் அப்ப தான் NOTTAA கண்ட்ரோலில் இருக்கும்


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:04

அன்புமணி மேல் உள்ள ஊழல் வழக்கு இன்னும் உயிரோடுதான் உள்ளது என்று ஒரு முறை அமித் ஷா ராமதாஸிற்கு போன் அடித்தால், எடப்பாடி டேபிளுக்கு அடியில் புகுந்தாலும், ராமதாஸ் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க மாட்டார்.


Arachi
பிப் 23, 2024 19:44

பாமக இது ஒரு கட்சி. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் தனித்து நிற்கிறது. டவுசர் கிழிஞ்சிடும்னு நல்லாவே தெரியும். மக்களவையில் கிடைக்கா விட்டால் கூட ஒரு மாநிலவையில் ஒரு எம்பி வேணும். இதற்காக ஒரு கூட்டணி.


Anbuselvan
பிப் 23, 2024 19:32

அதிமுக விற்கு தாவி விட போகிறார்கள் இவர்கள். மருத்துவர்களே உஷாரா இருங்க


M Ramachandran
பிப் 23, 2024 18:59

பழனியின் கூவத்தூர் நாடகம் நாறி போ ய் கிடக்கிறது. தீ மு க்கா காரன் கார்ட்டூன் போttது கேவல படுத்திட்டான்


K.Ramakrishnan
பிப் 23, 2024 18:44

ஒருவேளை 3 பேரும் கட்சி மாறுதாங்களோ...?


Jysenn
பிப் 23, 2024 18:22

PMK and Premalata party are mostly interested in the number of suitcases only. Nothing else. They will align with the highest bidder.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை