உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெடுஞ்சாலை விரிவாக்க பகுதிகளில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வு கூடுதல் இழப்பீடு பெற தில்லுமுல்லு

நெடுஞ்சாலை விரிவாக்க பகுதிகளில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வு கூடுதல் இழப்பீடு பெற தில்லுமுல்லு

சென்னை:தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் திருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி தலைமையில் அதிகாரிகள் அடங்கிய உயர் நிலை குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர், மண்டல வாரியாக சார் - பதிவாளர் அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் வழிகாட்டி மதிப்புகள், அவற்றை உயர்த்துவதற்கான உத்தேச மதிப்புகள் போன்ற விபரங்களை திரட்டி வருகின்றனர். அத்துடன், சார் பதிவாளர்களிடம் இருந்தும், பொது மக்கள் தரப்பில் இருந்தும் விபரங்கள் சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலை விரிவாக்க திட்டங்களுக்காக எடுக்க, உத்தேசிக்கப்பட்ட நிலங்களின் மதிப்புகளில், சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தன.குறிப்பிட்ட சில வழித்தடங்களில், உள்ளூர் பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக, அரசிடம் இருந்து கூடுதல் இழப்பீடு பெறும் நோக்கத்தில், வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்படுவதாகவும், வாசுகி தலைமையிலான உயர் நிலை குழுவிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.அதனால், சென்னை, வேலுார் மண்டலங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட உயர் நிலை குழுவினர், நெடுஞ்சாலை பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு குறித்த தற்போதைய நிலவரம், சமீபத்திய மாற்றங்கள் போன்ற விபரங்களை அனுப்புமாறு சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுஉள்ளனர்.இதுபோன்ற சமீபத்திய செயற்கையான மாற்றங்களை விசாரித்தால், முறைகேட்டில் ஈடுபட்ட சார் -- பதிவாளர்கள் சிக்குவர் என்று, பதிவுத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ