உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு

2 ஏக்கர் இலவச நில மோசடி ஆய்வு நடத்த உத்தரவு

திண்டுக்கல் : கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் இலவச நிலங்களை, தி.மு.க., வினர் அபகரித்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம், கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது. பலருக்கு தரிசு, பாறைகள் உள்ள நிலங்கள் வழங்கப்பட்டன. அதையும் தொடர்ச்சியாக வழங்க முடியவில்லை. நிலத்தையும் செம்மைப்படுத்தி தரவில்லை.இந்நிலையில், இவற்றை போலி ஆவணங்கள் மூலம் தி.மு.க., வினர் அபகரித்ததாக புகார் எழுந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின், இதில் அரங்கேறிய மோசடிகள் குறித்து விசாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் வருவாய் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இலவச நிலம் பயனாளி பெயரில் உள்ளதா, அல்லது தி.மு.க., வினர் பினாமியாக வாங்கியுள்ளரா? என்பது குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி