உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்திக்கு பிப்., 9 முதல் நேரடி விமான சேவை

அயோத்திக்கு பிப்., 9 முதல் நேரடி விமான சேவை

சென்னை:அயோத்தி ராமர் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை, பிப்., 9ம் தேதி துவங்க உள்ளது.சென்னை உள்நாட்டு விமான நிலைய முனையம் 1ல் இருந்து, பிப்., 9ம் தேதி முதல், 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம், இந்த விமான சேவையை துவங்குகிறது. சென்னையில் இருந்து பகல், 12:40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3:15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேவிமானம், மாலை 4:00 மணிக்கு அயோத்தியில் புறப்பட்டு, மாலை, 6:20 மணிக்கு சென்னை வந்து சேரும். ஒருவருக்கு 6,499 ரூபாய் கட்டணம். ஒரே நேரத்தில், 180 பேர் பயணிக்க முடியும். முன்பதிவு துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்