உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக, அதிமுக கூட்டணிகள் காலாவதியான கருப்பு-வெள்ளை டிவி போன்றது: அன்புமணி ஒப்பீடு

திமுக, அதிமுக கூட்டணிகள் காலாவதியான கருப்பு-வெள்ளை டிவி போன்றது: அன்புமணி ஒப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: ''திமுக, அதிமுக கூட்டணிகள் பழைய கருப்பு-வெள்ளை டிவி போன்று காலாவதியானது; தேசிய ஜனநாயக கூட்டணி எல்இடி, எல்சிடி டிவி போன்று புதுசு'' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இவர்களால் தமிழகத்திற்கு இனி எந்த பயனும் இல்லை. காலாவதியான இவர்கள் இனி தமிழகத்திற்கு தேவையில்லை. இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளையடித்து நாசமாக்கி வருகின்றன.பழைய மாடலை தான் இப்போது முதல்வர் ஸ்டாலின் 'திராவிட மாடல்' என்கிறார். பழைய பிளாக் அண்டு வொயிட் டிவி (கருப்பு-வெள்ளை டிவி) யாராவது வீட்டில் வைத்திருக்கிறீர்களா? அது காலாவதியாகி போய்விட்டது. அதுபோன்றதுதான் திமுக., அதிமுக., கூட்டணிகள். ஆனால், இங்குள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எல்.இ.டி., எல்.சி.டி., டிவி போன்றது; இதுதான் புதுசு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulandai kannan
ஏப் 02, 2024 20:57

சரியான ஒப்பீடு


Prasath
ஏப் 02, 2024 16:20

Poor Attendance MP


தமிழ்
ஏப் 02, 2024 14:57

ஒரு சிறு திருத்தம். திமுக அதிமுக கட்சிகளால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லையென்றுதான் பிஜேபி க்கு காவடி தூக்கிவிட்டீர்கள் அல்லவா.ஆக இனிமேல் எக்காலத்திலும் இவ்விரு கட்சிகளிடமும் தேர்தலில் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.


Pandianpillai Pandi
ஏப் 02, 2024 14:13

உள்ளே வெளியே மங்காத்தா ஆடும் பா ம க தி மு க வை விமர்சனம் செய்ய அருகதை அற்றது உள்ளே வெளியே பார்த்திபன் அவர்களாவது இறுதியில் திருந்துவதாக கருப்பு வெள்ளை டி வீ காலத்தில் பார்த்த நினைவு இருக்கின்றது ஆனா உங்க கட்சி இன்னும் மங்காத்தா ஆடிகொண்டும் வன்முறையிலும் தான் இருக்கிறது இதை எல் இ டி டிவில வேற மக்கள் பார்க்கனுமா?


P. SRINIVASALU
ஏப் 02, 2024 12:50

பாட்டாளி மக்கள் கட்சி சேராத கூட்டணி இல்லை அவர்கள் போன இடமெல்லாம் தோல்விதான் அவர்கள் பணத்துக்காக அரசியல் செய்பவர்கள் அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை மற்றவர்களை விமர்சிக்க


varatha rajan
ஏப் 02, 2024 12:49

அட நம்ம தாமசு ஆல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை