உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்

தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்

சென்னை: ''மக்கள் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு பை பை ஸ்டாலின் சொல்லிடுவார்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க., அயலக அணியே சாட்சி!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=681s2jnf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க., இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!அ.தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்த வர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதல்வரே சாட்சி! 2026-ல் ஒரே version தான். அது அ.தி.மு.க., version தான்! மக்கள் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு பை பை ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை