உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ; மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ; மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ''விமன் பவரில்' (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் 'பவரு'க்கு வரப்போகிறது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், ஹீரோ '' என, பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கூட்ட மைதானத்திற்குள் நுழைந்தார். துணை பொது செயலரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி பேசினார்.மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகையில்,''2026 சட்டசபை தேர்தலுக்கு இந்த மேற்கு மண்டல மாநாடு அடித்தளமாக அமைய வேண்டும். மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க கூடிய வகையில், 100 சதவீதம் வெற்றியை கொடுக்க வேண்டும்,'' என்றார்.முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது 'பவர்புல்' ஆக இருக்கிறது. 'விமன் பவரில்' (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் 'பவரு'க்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'. அந்த 'ஹீரோ'வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று தயாரித்த தேர்தல் அறிக்கை முழுமையான வெற்றியை தேடித்தந்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற இருக்கிறோம்.

'ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் கோமா'

பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு அதை அமல்படுத்தாமல், பெயரளவில் வைத்துள்ளது; அது எப்போது அமலுக்கு வரும் என, சொல்ல முடியாது. 'ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் கோமா' என்ற நிலை தான் இது. பெண்களுக்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ. விரும்பவில்லை.தமிழகத்தில், 1.39 கோடி பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; பஸ்களில் விடியல் பயண திட்டத்தின் கீழ், இதுவரை, 900 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர்.கல்வியை மட்டும் தான் யாராலும் திருட முடியாது என்பதற்காக தான், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, கல்லுாரி பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தினோம். தமிழகத்தில் ஸ்டார்ட் அப் மூலம், 13 விழுக்காடு பெண்கள் தொழில் முனைவோராக மாறி, பொருளாதாரத்துக்கு பங்களிக்கின்றனர்.

கமலாலய அறிக்கை; அ.தி.மு.க. லெட்டர் பேடு

தமிழகத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 88 விழுக்காடு பெண்கள் பயனடைந்தனர்; ஆனால், அந்த திட்டத்தை பா.ஜ., அரசு இழுத்து மூடிவிட்டது. திட்டத்தில், 40 நாட்கள் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான நிதி சுமையையும் மாநில அரசின் மீது சுமத்தி, பல்வேறு நி பந்தனைகளை விதித்துள் ளது. இதற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி முட்டுக் கொடுத்து வருகிறார். கமலாலயத்தில் தயாராகும் அறிக்கையை, அ.தி.மு.க. லெட்டர் பேடில் வெளியிட்டு வருகிறார்.அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று, 'திராவிட மாடல், 2.0' திட்டத்தில் பெண்களுக்கான திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த உள்ளோம். எனவே, பெண்களுக்காக தி.மு.க. அரசு செய்யும் சாதனைகளை வீடு, வீடாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, எம்.பி. - ராஜா, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

HoneyBee
டிச 30, 2025 14:39

இப்படியே பொய்யா பேசிட்டு இருங்க. தமிழ் நாட்டில் நிம்மதி வருமான்னு பாக்கலாம். மக்கள் ஒன்றும் பைத்தியம்/ கூ முட்ட கூட்டம் இல்ல. வச்சு செய்வாங்க


Raja
டிச 30, 2025 14:32

சின்னி ஜெயந்த் , சார்லி கூட இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்களாக நடிப்பதை விட்டு விட்டனர். திருட்டுமுக தேர்தல் அறிக்கை முக காலத்திலிருந்து ஒரே அறிக்கை தான், கட்ச தீவை மீட்போம், சிங்கார சென்னை, கூவம் ஆற்றை தூய்மை படுத்தி கப்பல் விடுவோம், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், புதிதாக நீட் தேர்வு ரத்து செய்வோம். இது தான் தேர்தல் அறிக்கை என்னும் கிழட்டு ஹீரோ. போதை வாழ் தமிழன் என்ன நடக்கிறது என்ற அறியாமையில் வோட்டு போடுகிறான்.


V Venkatachalam, Chennai-87
டிச 30, 2025 14:30

எடுடா மோளம் அடிடா தாளம். கேக்குற கேனையன்களே கேழ்வரகுல நெய் வடியுது. புடிச்சிக்கோங்க.


lana
டிச 30, 2025 14:28

நான் கூட யோசிப்பேன். ஏன் தமிழ்நாட்டு வந்த கேடு. இப்படி ஒரு முதல்வர் ன்னு. அப்புறம் தான் புரிந்தது. கர்மா. நல்ல ஒரு கர்மவீரர் ஐ தோல்வி யுற செய்த பாவம். அதே போல் நம் அப்பா தாத்தா செய்த பாவம் நமக்கு. நாமாவது நமது சந்ததிகளை சந்தோசமா வாழ வைப்போம்


ram
டிச 30, 2025 13:43

என்ன பன்றது ... இதெல்லாம் தமிழகத்தோட சாபக்கேடு... கருமம்டா.. இதையெல்லாம் சகிச்சுக்கிட்டும் பொறுத்துக்கிட்டும் தானே போக வேண்டியிருக்கு.


ram
டிச 30, 2025 13:41

போ தேர்தல் அரிக்கை அப்படியே கிழிச்சு தள்ளிட்டீங்க.. அண்ணன் தங்கை அப்பன் மகன் மாமன் மச்சுனன் எல்லோருமா சேர்ந்து.. இந்த தேர்தலிலே அப்படியே சாயாமல் உள்ளே தள்ளிடுவீங்க...


Narasimhan
டிச 30, 2025 13:21

பஸ் பசி, பிரியாணி ஓசி எல்லாம் ஓசி. கவுண்டமணி சொல்வதுபோல் ப்ரீயாக கொடுத்தால் பினாயில் கூட குடிப்பாங்க. ஒட்டு போடமாட்டாங்களான்ன


Anand
டிச 30, 2025 13:09

இவர் புளுகும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு இவருக்கே புரியவில்லை, சொன்னாலும் விளங்காது, அதுபோல கூலிக்கு சேர்த்த கூட்டத்தில் உள்ள எவரும் இவரோட பேச்சை கேட்க தயாரில்லை, எப்படா கூட்டம் முடியும், ஏதாவது பொருள் அகப்படுமா என கண்களில் விளக்கெண்ணெய் விட்டு தேடுவதில் தான் குறியாக இருந்தது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.


chinnamanibalan
டிச 30, 2025 12:57

அரசு திட்டங்களில் சதவீத அடிப்படையில் கமிஷன் கொள்ளை, அலுவலகங்களில் கையூட்டு கொள்ளை, மலைக் குன்றுகளில் பல கொள்ளை, ஆறுகளில் மணல் கொள்ளை, மது மற்றும் போதைப் பொருட்களால் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் சீரழிவு, வரையறை இல்லாத இலவசங்களால் பத்து லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் அரசு நிர்வாகம் தவிப்பு. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு ஹீரோ என்ற போலி முகமூடியுடன் வந்தால், தமிழகம் தாங்காது!


MARAN
டிச 30, 2025 12:15

என்ன என்ன புழுகணுமோ எல்லாத்தையும் கடந்த தேர்தல்ல புளுங்கியாச்சி , மக்கள் இனி என்ன புளுகுணாலும் நம்பமாட்டார்கள் , நான்கே வருடத்தில் 4 லட்சம் கோடி , என்ன பண்ணி கிழிச்சீங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை