உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனி தொகுதியில் தி.மு.க., தோற்றால் ராஜினாமா; அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

தேனி தொகுதியில் தி.மு.க., தோற்றால் ராஜினாமா; அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன்; அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கி உள்ளார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வெல்லாவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
மார் 27, 2024 14:34

உச்ச நீதிமன்றம் சென்று ஆளுநரையே மிரட்டி பதவி ஈர்க்கும் நிலைக்கு வந்த பின்பு பாதையை இழக்க யார்தான் முன்வருவார்கள் புதிய கட்சி ஒன்று பிறக்குகிறது என்றால் , அதன் தாய்க்கட்சியில் இருந்துதான் பிறக்கும், அப்போது கொள்கை என்பது கீரியும் பாம்பும் போல், ஆனால் காலத்துக்கு ஏற்ப அதே கட்சியுடன் கூட்டு வைக்கும் நிலைக்கு வந்து , தங்களுக்கு பதவி என்றும் என்ற நோக்கில் வேகமாக ஓடிக்கொண்டு செல்லும் இந்த காலகட்டத்தில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை அது வெறும் பேச்சுக்காக வந்தே மாதரம்


panneer selvam
மார் 26, 2024 00:45

Murthi ji , keep your resignation letter ready or now itself , make an announcement that your speech is twisted and escape


R.MURALIKRISHNAN
மார் 25, 2024 23:09

ராஜினமா செய்யுங்கள் தமிழ்நாடு முன்னேறும்


vbs manian
மார் 25, 2024 22:44

yellaam thayaar aagivittathu


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை