மேலும் செய்திகள்
மனித, விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை
7 minutes ago
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் , முதல்வர் வருகையின் போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகனை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல் வர் ஸ்டாலின், நேற்று மதியம், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். சர்ச்சை முதல்வரை வரவேற்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஒருவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அவரை போலீசார் அழைத்துச்சென்றனர். அவரிடம் நிருபர்கள், 'என்ன கோஷம் எழுப்பினீர்கள்?' என்று கேட்டதற்கு, 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை துாண்டுகின்றனர்' என்றார். அப்போது, போலீசார் அந்த நபரின் வாயை மூடி, போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகன் அக் ஷய், 22, என்பதும், டில்லி சட்ட கல்லுாரியில் படிக்கிறார் என்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். அக் ஷய், தன் தந்தை மார்க்கண்டேயனுடன் நேற்று எட்டையபுரத்தில் அளித்த பேட்டி: நீதிபதி சுவாமிநாதன் பாசிச கருத்துகளையும், சொந்த கருத்துகளையும் தீர்ப்பில் இணைத்து எழுதியதை போல எனக்கு தென்பட்டது. அவர் ஒரு நிகழ்ச்சியிலும், தீர்ப்பு மூலமாக தான் தீபத்தை ஏற்ற முடியவில்லை; அரங்கத்தில் தீபம் ஏற்றுகிறேன் என, பேசியிருந்தார். கோஷம் தொடர்ந்து, முதல்வர் புரட்சிகரமான ஒரு அறிக்கையை கொடுத்தார். சட்டரீதியாக நாம் பார்த்து கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த தைரியத்தில் தான் வி மான நிலையத்தில், ' நீதிபதி சுவாமி நாதன் ஒழிக' என, கோஷம் எழுப்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.
7 minutes ago