உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் பி டீம் விஜய்: பா.ஜ., திரட்டிய பகீர் தகவல்

தி.மு.க.,வின் பி டீம் விஜய்: பா.ஜ., திரட்டிய பகீர் தகவல்

சென்னை: கூட்டணியில் சேர, த.வெ.க., தலைவர் விஜய்க்கு அ.தி.மு.க., தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. அதை, விஜய் ஏற்கவில்லை. 'தி.மு.க.,வின், 'பி டீம்' தான் விஜய்; எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவிக்க, பா.ஜ., மேலிடம் ஆதாரங்களை திரட்டி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w14kwvif&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. தேர்தல் நெருக்கத்தில், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்தால், அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையே, தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. இது, தேர்தல் வெற்றிக்கு உதவுவதில்லை என்பதை, உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட நம்புகிறார். எனவே தான் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாக, கூட்டணியில் கட்சிகளை சேர்த்து, தேர்தலுக்குள் அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையிலான உறவை பலப்படுத்த, அமித் ஷா விரும்பினார். இதற்காகவே, கடந்த ஏப்ரலில் சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். த.வெ.க.,வை கூட்டணியில் சேர்க்க, விஜயுடன் பா.ஜ., மேலிடம் பேச்சு நடத்தியது. அதை அவர் ஏற்கவில்லை. 'பா.ஜ., உடன் கூட்டணி இல்லை' என, அறிவித்து விட்டார். இருந்தபோதும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பழனிசாமி, விஜயை கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். விஜய் அதை பொருட்படுத்தவே இல்லை. தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதுகிறார். அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் உறுதியாக வரமாட்டார். ஏனெனில், அவர் தி.மு.க.,வின், 'பீ டீம்' போல் செயல்படுகிறார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, மக்கள் நல கூட்டணியை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது போல, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த விஜயை பயன்படுத்த தி.மு.க., விரும்புகிறது. அதாவது, தி.மு.க., அரசு மீதான அதிருப்தி ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடக்கூடாது; அந்த ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் எண்ணம். இதையறிந்ததும், விஜயின் நகர்வுகள் அனைத்தையும் பா.ஜ., உன்னிப்பாக கவனித்து வருகிறது. 'தி.மு.க.,வுக்கு எதிராக கட்சி நடத்துங்கள். அதேநேரம், அ.தி.மு.க., உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி சேரக்கூடாது. இதுவே, எங்கள் விருப்பம்' என, தி.மு.க., தரப்பில் இருந்து, விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கும் தகவலையும் பா.ஜ., தரப்பு அறிந்து கொண்டு விட்டது. இவ்விபரங்களை பழனிசாமியிடம் தெரிவிப்பதோடு, 'விஜயை கூட்டணிக்கு அழைப்பதை விட்டுவிட்டு, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம்' என அவரைக் கேட்டுக்கொள்ள, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

RAVINDRAN.G
ஜூலை 29, 2025 10:23

அரசியலில் மானம் வெட்கம் சூடு சொரணை இருக்கக்கூடாது.


venugopal s
ஜூலை 24, 2025 23:02

இதே விஜய் இரண்டு நாட்கள் கழித்து பாஜக வுடன் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டால் இப்போது அவரை திட்டித் தீர்க்கும் சங்கிகள் எல்லோரும் அவருக்கு ஆரத்தி எடுத்து பாராட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்!


T.sthivinayagam
ஜூலை 24, 2025 21:19

வாங்க வாங்க என்று மாத்தி மாத்தி கெஞ்ச வேண்டியது வரமறுத்தால் திட்டி தீர்க்க வேண்டியது என்ன கொள்கையோ என மக்கள் பேசிக்கொள்கின்றனர்


kumaran
ஜூலை 24, 2025 19:46

விஜய் கட்சி திமுகவின் பி டீம் அதன் கட்சி ஆரம்பித்த அன்றே சொல்லி விட்டார் மத்திய அரசை திமுக ஸ்டைலில் த வெ க ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எங்க அப்பன் குதுருக்குள் இல்லை என்பதே போல...


berlin
ஜூலை 24, 2025 19:26

ஆக இங்கே யாரும் நல்ல நிர்வாகம் கொடுக்க வரல


Loganathan Balakrishnan
ஜூலை 24, 2025 17:48

ஆமாம் அந்த மடையன் விஜய் DMK ஓட பி டீம் தான் அவங்களோட கொள்கையும் ஒன்னு இவனோட கொள்கையும் ஒன்னு ஓட்ட பிரித்து மறுபடியும் DMK வெற்றி பெற செய்து கொடுக்க கூடிய ப்ராஜெக்ட் தான் விஜய்க்கு DMK கொடுத்து இருக்கு அதான் 200UP ஆனால் இவனுக்கு 2000கோடி அவளத்தான் வித்தியாசம்


ramesh
ஜூலை 24, 2025 17:23

ஆட தெரியாத ஆட்ட காரி தெரு கோணல் என்றாளாம் .அதுபோல தான் இருக்கிறது இந்த பிஜேபி காரன் சொல்லுவது


vivek
ஜூலை 24, 2025 20:42

சரி சரி அப்படி ஓரமா போய் ஆடு ரமேஷு


Nachiar
ஜூலை 24, 2025 16:46

ஐந்து அறிவாவது ஆறு அறிவாவது. உண்மையான வீரர் எல்லை சாமிகள் நாட்டுக்காக மரணிக்கும் பொழுது எத்தனை பேர் கண்ணீர் வடிக்கிறீர்கள்? எத்தனை பேர் அவர்கள் மரண சடக்கில் பங்கெடுக்கிறீர்கள்? அந்த வீரர் குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதுகிறீர்கள்? எத்தனை பத்திரிகைகள் இதற்க்கு முதல் இடம் கொடுத்து இரங்கல் உரை பதிக்கிறீர்கள்? உண்மையான வீரனைப்போல் மாத்துப் போட்டு இன்னோருவன் எழுதியதை பேசி நடிக்கும் நடிகர்கள் வீடு இழவுக்கு வருந்தும் மக்கள் இருக்கும் வரை நாடு உறுப்பு படாது. முகத்துக்கு மாத்துப் போட்டு கொண்டு நடிக்கும் கூட்டத்துக்கு இறந்தால் அரச மரியாதையாக்கும். உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரிய இரண்டு அறிவு இருந்ததால் போதும். எல் முருகன் நாட்டுக்கு என்ன செய்தாரோ தெரியாது . அண்ணாமலைக்குப் பின் தமிழக பிஜேபி பை பை. ஜெய் ஹிந்த்


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 16:44

எங்க அமித்திமுக BJ கட்சியை கழட்டிவிடுமோ என்று பயந்து அண்டப்புழுகு ஆகாசபுழுகு கதைகளையெல்லாம் அவிழ்த்துவிட பார்க்கிறார்கள் ....இந்த கம்பிக்கட்டும் கதைகளை நம்ப தமிழகமக்கள் ஒன்றும் வடக்கத்திய பீடாவையர்கள் இல்லை ....ஒரு ஆட்டுக்குட்டி போல இன்னொரு ஆசாமியை தயார் செய்து தான் ரைடு விட்டார்கள் ... விழுப்புரத்தில் இருந்து காரில் வரவைத்தபோது கதை திரைக்கதை வசனம் ல்லாம் சங்கிகள் எழுதிக்கொடுத்ததை அந்த ஜாயிண்ட் வருமானவரித்துறை கமிஷனர் வாந்தி டுத்துவிட்ட காரணத்தால் தான் ராசியில் ஆட்சி துவக்கப்பட்டது என்பது ஊர் அறிந்த உண்மை ... அந்த ஆளே இப்போ கட்சியில் மூன்றாம் இடத்துக்கு நியமிக்கப்பட்டு உளவுபார்க்க அனுப்பிவைக்கப்பட்டதயும் தமிழர்கள் எப்போதோ புரிந்துகொண்டார்கள் .....


KRISHNAN R
ஜூலை 24, 2025 16:00

த வெ கா....... டி மூ கா விட மோசம்.. டி மூ கா.. மேல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை